தலைக் கவசம் அணிவது அவரவர்
தலையெழுத்து மாறாமல்
இருப்பதற்காகத் தானே தவிர
அது ஒன்றும் அரசாங்கம்
நமக்கு கொடுத்த சாபமோ
தண்டணையோ அல்ல...!!!
காலுக்கு காலணி அணிவது எவ்வளவு
அவசியமோ அதை விட ஆயிரம் மடங்கு
அவசியமானது தலைக்குக் கவசம் அணிவது...!!!
விரைவில் முடிவெடுத்து கொள்வோம்
நமக்கு உயிர் முக்கியமா இல்லை
ம** முக்கியமா என்று...!!!
உதிரத்தை இழப்பதற்கு
உடலில் இருந்து வியர்வையை
இழக்கலாம் ஒன்றும்
குறைந்து விட போவதில்லை...!!!
தலைக்கவசம் அணிவோம்...!!!
விபத்து வருமுன் மட்டுமல்ல
விபத்து வந்துவிட்டாலும் கூட
உயிரை காத்துக் கொள்வோம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment