அந்தப் பிச்சைக்காரனின் முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது. யாரிடமும் பிச்சைக் கேட்காமல் அமைதியாகவே இருந்தான். எவராவது பிச்சை இட்டாலும் கூட முகத்திலும் உடலசைவிலும் எந்த சலனமும் இல்லாமல் சுவற்றில் வரைந்த சித்திரம் போல் இருந்தான். அருகில் இருந்த சக பிச்சைக்கார நண்பர்களுக்கு அன்று அவனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவன் பிச்சை எடுக்க வந்த நாளில் இருந்து ஒருநாள் கூட இப்படி சோர்ந்து போய் அமர்ந்ததில்லை.. எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், வருபவர்கள் போகிறவர்களிடமெல்லாம் பிச்சைக் கேட்டு கொண்டும் பிசியாகவே இருப்பான். நாளின் முடிவில் அங்கிருப்பவர்களிலேயே அதிகப் பணம் அவன் தட்டில் தான் இருக்கும்.. சக பிச்சைக்காரன் நண்பன் அவனிடம் பேச முயன்றான். ஆனால் அவன் வாயை திறக்கவே இல்லை. அதனால் அவனை யாருமே தொந்தரவு செய்யவில்லை. அமைதியாவே இருந்ததால் அன்று அவன் தட்டில் காசு விழவே இல்லை. தனக்கு கிடைத்ததில் பாதியை அவனோடு பகிர்ந்துக் கொண்டான் சக பிச்சைக்கார நண்பன். ஒரு வாய் சாப்பிட்ட உடனே அவன் கண்களில் இருந்து சில துளிகள் எட்டிப் பார்த்தன. இந்த முறை அவன் நண்பன் கேட்கும் முன் அவனே பேச ஆரம்பித்தான். "அந...