Skip to main content
"வெற்றி பெற்றது" அறிவிக்கப்பட்டதும் திரு.ஸ்டாலின் அதிமுக' விற்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு திமுக'விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.. திமுக பங்கேற்குமா இல்லையா என்ற சந்தேகம் நிலவிக் கொண்டிருந்த வேளையில் திரு.ஸ்டாலின் விழாவில் பங்கேற்றார். பின் வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டது என்று திரு.கருணாநிதி தனது குற்றச்சாட்டை பதிவு செய்திருந்த வேளையில் ஸ்டாலின் அதைப் பற்றி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் " தமிழக முதல்வர் பதவி ஏற்பில் பங்கு பெற்றேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்'' என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.

திரு.கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் " ஸ்டாலின் பங்கேற்றார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மரபு ரீதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டதால் தான் இருக்கை பின் வரிசையில் அமைந்துவிட்டதாகவும், அதிகாரிகள் முன்கூட்டியே என் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால், மரபு விதிகளை தளர்த்தி அவரை முன் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன் என்றும் ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என்றும் விவரித்துள்ளார். மேலும் மாநிலத்தின் நன்மைக்காக அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இவ்விரு செயல்களும்(அதாவது திரு.ஸ்டாலினின் வாழ்த்துக்களும், முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கமும்) சமிபத்திய அரசியல் கட்டத்தில் மிகவும் ஆரோக்கியமான சூழ்நிலையாகவே தோன்றுகிறது.

வலுவான எதிர்கட்சியாக உருப்பெற்றிருக்கும் திமுக'வின் கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முதல்வர்.ஜெயலலிதாவால் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அதேப் போல தொடர்ந்து இரண்டாவது முறையாக பொருப்பேற்று இருக்கும் அதிமுக அரசின் மீது மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அதிகம். மேற்கொள்ளும் ஒவ்வொரு சின்ன சின்ன செயல்களிலும் அனைவரின் பார்வையும் அரசின் மீது படியும். ஆக இரண்டு மிகப்பெரிய கட்சிகளின் ஆக்கபூர்வமான செயல்களை விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இச்செயல்கள் ஏற்படுத்துகின்றன..

தொடக்கம் சிறப்பாக அமைந்துவிட்டால் முடிவும் சிறப்பாக அமைய வாய்ப்பு அதிகம். அந்த வகையில் இது ஒரு நல்ல தொடக்கம். ஆரோக்கியமான தொடக்கம்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...