*நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், நம் ஓட்டை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும்..? ஒரு நாள் முழுவதுமாக கூலி வேலை செய்தாலும் கிடைக்காதப் பணம் ஒருவர் ஒரு சில நிமிடங்களில் இலவசமாக கொடுக்கும் போது, அதை வாங்கிக் கொண்டு அந்த நபருக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்று ஒரு சிலர் நினைக்கலாம்..? இப்படி நினைப்பது ஒரு விதத்தில் நியாமாகக் கூட தோன்றலாம்.. ஆனால் அன்று ஒரு நாள் அவர்கள் கொடுக்கும் பணத்தை கை நீட்டி வாங்கி நம் ஓட்டை விற்றுவிட்டால் அடுத்து ஐந்து வருடத்திற்கு அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுவோம். அந்த ஒரு நாள் சொற்ப பணத்திற்காக, அடுத்து ஐந்து வருடத்திற்கு நம் வெட்கம் மானம் சுயமரியாதை ஆகியவற்றை அடகு வைக்க வேண்டுமா.? என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆதலால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க, பணமாகவோ பொருளாகவோ யாராவது கொடுத்தால் முற்றிலுமாகப் புறக்கணிப்போம்...
*நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் நிலவி வரும் அவசிய தேவைகளையும் மற்றும் உடனடி தீர்வுகளையும் புரிந்தவர் யாரென்று என்று கலந்து ஆலோசித்து விட்டு தகுதியான வேட்பாளருக்கு வாக்களிப்போம். தொகுதியை பற்றிய சுயவிவரங்களே தெரியாதவரிடம் நாம் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்ப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையதாக இருக்காது. ஆக,நாங்கள் பரம்பரை பரம்பரையாக எந்த வேட்பாளர் நின்றாலும் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்வோம்.
*இலவசங்கள் மற்றும் சலுகை என்ற மாய வாக்குறுதிகளை மட்டும் மனதில் வைத்து நம் வாக்கினை குறிப்பிட்ட கட்சிக்கு ஒதுக்கீடு செய்யோம். இலவசங்கள் ஒருபோதும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விடாது.
*அனைவரும் கண்டிப்பாக வாக்களிப்போம் என்று உறுதிக் கொள்வோம். விடுமுறை இல்லை-வெயிலில் யார் நிற்பது- வாக்களித்தால் மட்டும் என்ன புதிதாக நடந்துவிட போகிறது என வெற்று காரணங்களை கூறாமல் அனைவரும் கண்டிப்பாக வாக்கினை செலுத்துவோம்.
*வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் உரிமை. உரிமை மட்டுமல்ல-நல்ல சமூகத்தினை உருவாக்குவதற்கு நமக்கு கிடைத்த வாய்ப்பு. நல்ல சமூகத்தை நாம் அமைத்துக் கொள்வதும்,அடுத்த தலைமுறைக்கு அமைத்துக் கொடுப்பதும் நம் கடமை.
* தேர்தல் நாள், இன்னொரு விடுமுறைக்கான தினம் அல்ல. இனி வரப் போகும் நம் தலைமுறைக்கான தினம்.
*உரிமையை உதறி தள்ளோம். கடமையை காற்றில் விடோம்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment