அப்பாவிடம் ஆயிரம் விடயங்களைப் பகிர்ந்து கொண்டாலும்- முன்னுக்கு பின் முரணாக வாதம் செய்தாலும்-அரசியல் பற்றிப் பேசும்போது மட்டும் அத்தனையும் தாண்டி தனிச் சுவாரசியம் தோன்றிவிடுகிறது.. அதுவும் எதிர்முகமாக நின்று சூடாக வாதிடும் போது அப்பா தோழனாகி விடுகிறார்.. அப்பா மகன் உறவு சுலபமாகி விடுகிறது..
இதுநாள் வரையில், ஓட்டுப் போட காலையில் சீக்கிரமே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியது உண்டே தவிர, இவருக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும் என்று ஒருபோதும் கட்டாயப்படுத்தியது இல்லை.

போன தேர்தலில் வாக்களித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது, யாருக்கு ஓட்டுப் போட்டாய்..? என்று கேட்டார். நான் நோட்டவிற்கு என்றேன்.
அதற்கு அவர் ஒற்றை வரியில், "இதற்கு ஏன் சென்னையில் இருந்து பணம் செலவழித்து வந்தாய்..! என்று கேட்டு நகர்ந்துவிட்டார். "சுளீர்" என்று இருந்தாலும் முடிவு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
நல்ல வேளை அந்தத் தேர்தலில், என் அப்பா ஓட்டளித்த வேட்பாளரும் ஜெயிக்கவில்லை. அவர் சார்ந்திருந்த கட்சியும் ஜெயிக்கவில்லை.

இன்று, எப்பொழுது வீட்டுக்கு வருகிறாய் என்றார்.. நான் தேர்தலுக்கு வருகிறேன் என்றேன். உடனே அவர் ஆதரவு கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும், சாதகங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார். கண்டிப்பாக இந்த முறை நூல் இழையிலாவது ஜெயித்து விடலாம் என்று உறுதியாகயும் உற்சாகமாகவும் சொன்னார்.
வழக்கம் போல, இந்த முறையும் நோட்டாவிற்குத் தானா..? என்று ஏளனச் சிரிப்புடன் கேட்டார்.. அதுத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கு என் ஓட்டு இல்லை என்றுச் சொல்லி போனை வைத்துவிட்டேன்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment