Skip to main content

Posts

Showing posts from January, 2017
வெண்ணிலவைக் காத்திட விண்மீன்களை காவலுக்கு இருத்தியது யாரோ...!!! கார்த்திக் பிரகாசம் ...
சமூக வலைத்தளங்கள் இல்லா காலத்தில் வாழ்ந்து மறைந்த பிரபலங்கள் பாக்கியசாலிகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
எங்கள் உரிமைக்காக, இனத்தின் அடையாளத்திற்காக என்றானபின் ஆண் பெண் வேறுபாடு என்ன..! சிறியவர் பெரியவர் வித்தியாசம் என்ன..! படித்தவன் படிக்காதவன் பேதம் என்ன...! கிராமத்தான் நகரத்தான் பாகுபாடு என்ன..! சாதி மதமென ஒடுக்கி வைக்கும் காரணிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கொப்பளிக்கும் இன உணர்ச்சியை நெஞ்சில் சுமந்து கொண்டு வீதியில் இறங்கியிருக்கிறது தமிழினம். விழித்துக் கொண்டோம். போராட வீதிக்கு வந்துவிட்டோம். இனி எங்கள் உரிமைகளின் மீதும், கலாச்சாரத்தின் மீதான ஒடுக்குமுறை நீங்கும் வரையிலும் ஓயமாட்டோம். கார்த்திக் பிரகாசம்...

பொண்ணும் பொன்னும்..

என் பேரும் தங்கம் உன் பேரும் தங்கம் பேரு தான் தங்கம் ஆனா நாம என்னைக்கி வீட்ல தங்கறது பாதி வாழ்நாள் எனக்கு அடுப்பங்கரையில உனக்கோ அடகுக் கடையில அந்தக் குடிகார மனுசன் என்ன கட்டிக்கிட்டு அவன் அல்பாயிசில போயிட்டான் இப்ப எப்படி இருக்க சாப்பிட்டியா' ன்னு கேக்க எனக்கொரு நாதியில்ல அவசரத்துக்கு வச்ச உன்னைய மீக்கறதுக்கோ என்கைல காசில்ல நான் பொண்ணா பொறந்ததும் நீ பொன்னா வந்ததும் அவமானத்துக்கும் அடமானத்துக்கும் தானா...!!! கார்த்திக் பிரகாசம்...
பண்டிகை நேரங்களில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வது என்பது விண்வெளி பயணத்திற்கிணையான சாகசமாகிவிட்டது.. தட்கல் முன்பதிவிற்கு விரல்நுனியில் எல்லா உள்ள...

ஒருநாள் ஊதியம்

கடந்த நூறு வருடத்தில் காணாத வறட்சியால் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்தது மற்றும் காவிரி நீர் முழுதாக கிடைக்காமல் போனது ஆகிய காரணங்களால் பயிர்களெல்லாம் வாடிப் போய் கருகி விட்டன. பொங்கலுக்கு புதுப்பொலிவுடன் உற்சாகமாகத் தயாராகும் விவசாயிகள் இந்தமுறை கலங்கிப் போய் நிற்கின்றனர் அரசு கணக்கெடுப்பின்படி இதுவரை பதினேழு பேர் தற்கொலை மற்றும் மனம் தாங்காமல் உயிர்த் துறந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் மனம் தளராமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் ஏராளம்பேர் இருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு கைக்கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற நம் ஒருநாள் ஊதியத்தை அந்த விவசாயிகளுக்கென்று ஒதுக்குவோம். நம் பலபேரின் ஒருநாள் ஊதியம் ஒன்று சேர்த்தால் நம்மால் முடிந்தவரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவலாம். ஏனென்றால் இது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. நம் பிரச்சனை. அவர்களின் சோற்றுப...
விடுதலைக்கு போராடிய காலம் போய் விடுமுறைக்கு போராட வேண்டிய கட்டாயத்தில் நாம்...!!! கார்த்திக் பிரகாசம். ..
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்காகத் தீவிரமான போராட்டங்கள் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு இதுவரையில் எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனம் காத்துவருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் "பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை" என்ற மத்திய அரசின் அறிவிப்பு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் செயலாகும். மேலும் இது தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் முயற்சி. ஒரு மாநிலத்தின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் மதிப்பளிக்காத வரையில் அம்மாநில மக்களின் உணர்வுகளை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. மாநில அரசும் இதுவரையில் எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீர்குலைக்க முயற்சி செய்யும் மத்திய அரசிற்கு , மாநில அரசு மற்றும் கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். கட்டாய விடுமுறை இல்லை என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.. தமிழர் திருநாள் வெறும் விடுமுறைக்கான தினம் மட்டுமல்ல. அது தமிழர்களின்(எங்களின்)அடையாளம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் இல்லையேல் உணர்த்தப்பட வேண்டும்.. ...
புத்தகக் கண்காட்சியிலுள்ள ஒரு பதிப்பகத்தின் கடையில் புத்தகம் எடுத்துவிட்டு பணம் கட்டுவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தேன். வரிசையில் நின்றவர்கள் பெரும்பாலும் காசட்டை /கடனட்டையே வைத்திருந்தனர். காசட்டையை தேய்க்கும் இயந்திரத்தின் செயல்பாடு பொறுமையைச் சோதிப்பதாக இருந்ததால் கூட்டத்தில் நின்றவர்கள் சிறிது சலித்துக் கொண்டனர். இரண்டு மூன்று முறை தேய்த்தும் முறையான பண மரிமாற்றம் நிகழவில்லை. உடனே முன்னாள் நின்றுக் கொண்டிருந்தவர் டக்' கென்று ஒரு கமெண்ட் அடித்தார். என்னையா.. Cashless இந்தியா Cashless இந்தியா' னு சொல்றாங்க ஆனா இவ்வளவு Careless'ஆ இருக்காங்க...! ஒரு இருநூறு ரூபா தேய்க்கவே இவளோ முக்குது. இந்த லட்சணத்துல இந்தியா எப்படி டிஜிட்டல் இந்தியா ஆவும். இதக் கேட்ட நம்ம பணத்தத் திருப்பித் தர இன்னும் லேட் பண்ணுவாங்க. வரிசையின் முன்னும் பின்னும் சிரிப்புச் சத்தம். அந்த சத்தத்தில் சலிப்பும் ஏமாற்றமும் வயிற்று எரிச்சலும் சரி விகிதத்தில் கலந்திருந்தன. கார்த்திக் பிரகாசம்...
அவமானமும் உதாசீனமும் அடையப் போகும் வெற்றிக்கான ஊன்றுகோல்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தெருவில் என்னவோ பிதற்றிக் கொண்டுச் சென்றாள். பிச்சைக்காரர்கள் தங்கள் கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தொழிலுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். பேருந்துகள் பெருமூச்சு விட்டு புகையைக் கக்கித் தள்ளின. தெரு முக்கில் ஒரு பையன் நேற்று கழுவிய அதே காரை இன்றும் கழுவிக் கொண்டிருந்தான். ஆட்டோவை இடிப்பது போல சென்று மயிரிழையில் நின்ற கல்லூரி பேருந்து. இன்றும் இப்படித்தான் இயங்கத் தொடங்கியது நகரம்...!!! கார்த்திக் பிரகாசம்...

காந்தி இல்லாத நோட்டு

வெளியான புதிய ரூபாய்த்தாள்களில் பிழைகள் இருப்பது ஏற்கனவே நாட்டில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டது. அவசர அவசரமாக அச்சடித்ததால் சில பிழைகள் ஏற்பட்டுவிட்டன என்று ரிசர்வ் வாங்கி விளக்கம் அளித்தது. இன்று பிழைகளின் உச்சமாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வங்கியில் காந்தி படமே இல்லாத நோட்டுக்கள் விவசாயி ஒருவற்கு வழங்கப்பட்டுள்ளது. இது கள்ளநோட்டு இல்லை. அச்சுப்பிழை தான் என சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். ஒரு நாட்டின் ரூபாய்த்தாளிலேயே இத்தகைய பிழைகள். நல்லவேளை இதெல்லாம் பார்ப்பதற்கு காந்தி உயிரோடு இல்லை.  கார்த்திக் பிரகாசம்...

மானங்கெட்ட அசிங்கமான ஜடங்களாகிவிட்டோமா நாம்...???

பெங்களூரில் புத்தாண்டு இரவில் சாலையில் தனியாக நடந்துச் செல்லும் பெண்ணிடம் இரண்டு ஈனப்பிறவி இளைஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்ட ஒரு காணொளி வெளி வந்துள்ளது. தப்பிச் செல்ல முயலும் அந்தப் பெண்ணை தன் நண்பனுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து, முத்தமிட்டு கொடுமைப்படுத்துகிறான் அந்தக் கொடூரன். இதை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தடுக்க, அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்க ஒருத்தரும் முன்வரவில்லை. இத்தனைக்கும் இது நடந்தது நடுரோட்டில். நீங்கள் என்ன பாடம் நடத்தினாலும்,போராட்டம் செய்தாலும், அம்மாவாக இருந்தாலும் சகோதரியாக இருந்தாலும் பெண் என்றால் எங்களுக்கு ஒரு சதைப்பிண்டம். அவ்வளவுதான். அவளை எங்கே எப்படி வேண்டுமானாலும் வன்புணர்வு செய்யுமளவிற்கு மகாமட்டமான கேவலமான இளைஞர் கூட்டம் ஒருபுறம். கண்முன்னே கொலை நடந்தாலும் சரி, கொள்ளை நடந்தாலும் சரி கற்பழிப்பு என்றாலும் சரி நமக்கென்னவென்று வேடிக்கைப் பார்க்கும் கோழைத்தனமானக் கூட்டம் ஒருபுறம். மறதி மட்டுமல்ல வேடிக்கைப் பார்ப்பதும் நம் நாட்டின் தேசிய வியாதியாகிவிட்டது. வேடிக்கைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு செயலில் இறங்கிவிட்டால் பாதிக் குற்றங்கள...

ரயில் ம(மா)யம்...!!!

கூட்டத்தில் இருக்கை இல்லா சமயம் நிற்கத் தயங்கும் கால்கள் கூட்டமில்லா சமயத்தில் இருக்கைகள் இடமளிக்கையில் ஏனோ அமர மறக்கின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...

கடன்...!!!

அப்பா கந்துவட்டியில் வாங்கினார் மகன் கடனட்டையில் வாங்குகிறான்...!!! தலைமுறை தலைமுறையாகக் கடனால் கடனாய்ப் போகும் வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...