புத்தகக் கண்காட்சியிலுள்ள ஒரு பதிப்பகத்தின் கடையில் புத்தகம் எடுத்துவிட்டு பணம் கட்டுவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தேன். வரிசையில் நின்றவர்கள் பெரும்பாலும் காசட்டை /கடனட்டையே வைத்திருந்தனர். காசட்டையை தேய்க்கும் இயந்திரத்தின் செயல்பாடு பொறுமையைச் சோதிப்பதாக இருந்ததால் கூட்டத்தில் நின்றவர்கள் சிறிது சலித்துக் கொண்டனர். இரண்டு மூன்று முறை தேய்த்தும் முறையான பண மரிமாற்றம் நிகழவில்லை.
உடனே முன்னாள் நின்றுக் கொண்டிருந்தவர் டக்' கென்று ஒரு கமெண்ட் அடித்தார்.
என்னையா.. Cashless இந்தியா Cashless இந்தியா' னு சொல்றாங்க ஆனா இவ்வளவு Careless'ஆ இருக்காங்க...! ஒரு இருநூறு ரூபா தேய்க்கவே இவளோ முக்குது. இந்த லட்சணத்துல இந்தியா எப்படி டிஜிட்டல் இந்தியா ஆவும். இதக் கேட்ட நம்ம பணத்தத் திருப்பித் தர இன்னும் லேட் பண்ணுவாங்க.
வரிசையின் முன்னும் பின்னும் சிரிப்புச் சத்தம்.
அந்த சத்தத்தில் சலிப்பும் ஏமாற்றமும் வயிற்று எரிச்சலும் சரி விகிதத்தில் கலந்திருந்தன.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment