கடந்த நூறு வருடத்தில் காணாத வறட்சியால் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்தது மற்றும் காவிரி நீர் முழுதாக கிடைக்காமல் போனது ஆகிய காரணங்களால் பயிர்களெல்லாம் வாடிப் போய் கருகி விட்டன. பொங்கலுக்கு புதுப்பொலிவுடன் உற்சாகமாகத் தயாராகும் விவசாயிகள் இந்தமுறை கலங்கிப் போய் நிற்கின்றனர் அரசு கணக்கெடுப்பின்படி இதுவரை பதினேழு பேர் தற்கொலை மற்றும் மனம் தாங்காமல் உயிர்த் துறந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் மனம் தளராமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் ஏராளம்பேர் இருக்கின்றனர்.
அவர்களின் நம்பிக்கைக்கு கைக்கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற நம் ஒருநாள் ஊதியத்தை அந்த விவசாயிகளுக்கென்று ஒதுக்குவோம். நம் பலபேரின் ஒருநாள் ஊதியம் ஒன்று சேர்த்தால் நம்மால் முடிந்தவரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவலாம். ஏனென்றால் இது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. நம் பிரச்சனை. அவர்களின் சோற்றுப் பிரச்சனை மட்டுமல்ல நம் சோற்றுப் பிரச்சனையும் கூட. நம் சோற்றுக்காக உழைப்பவர்களின் பிரச்சனை.
ஒருநாள் ஊதியம்.. ஒன்று கூடுவோம்.. ஒன்று கூட்டுவோம்..
நண்பர்கள் தங்கள் விருப்பத்தைப் பின்னூட்டம் செய்யவும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment