தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்காகத் தீவிரமான போராட்டங்கள் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு இதுவரையில் எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனம் காத்துவருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் "பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை" என்ற மத்திய அரசின் அறிவிப்பு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் செயலாகும். மேலும் இது தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் முயற்சி.
ஒரு மாநிலத்தின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் மதிப்பளிக்காத வரையில் அம்மாநில மக்களின் உணர்வுகளை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. மாநில அரசும் இதுவரையில் எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீர்குலைக்க முயற்சி செய்யும் மத்திய அரசிற்கு , மாநில அரசு மற்றும் கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். கட்டாய விடுமுறை இல்லை என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்..
தமிழர் திருநாள் வெறும் விடுமுறைக்கான தினம் மட்டுமல்ல. அது தமிழர்களின்(எங்களின்)அடையாளம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் இல்லையேல் உணர்த்தப்பட வேண்டும்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment