Skip to main content

மானங்கெட்ட அசிங்கமான ஜடங்களாகிவிட்டோமா நாம்...???

பெங்களூரில் புத்தாண்டு இரவில் சாலையில் தனியாக நடந்துச் செல்லும் பெண்ணிடம் இரண்டு ஈனப்பிறவி இளைஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்ட ஒரு காணொளி வெளி வந்துள்ளது.

தப்பிச் செல்ல முயலும் அந்தப் பெண்ணை தன் நண்பனுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து, முத்தமிட்டு கொடுமைப்படுத்துகிறான் அந்தக் கொடூரன். இதை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தடுக்க, அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்க ஒருத்தரும் முன்வரவில்லை. இத்தனைக்கும் இது நடந்தது நடுரோட்டில்.

நீங்கள் என்ன பாடம் நடத்தினாலும்,போராட்டம் செய்தாலும், அம்மாவாக இருந்தாலும் சகோதரியாக இருந்தாலும் பெண் என்றால் எங்களுக்கு ஒரு சதைப்பிண்டம். அவ்வளவுதான். அவளை எங்கே எப்படி வேண்டுமானாலும் வன்புணர்வு செய்யுமளவிற்கு மகாமட்டமான கேவலமான இளைஞர் கூட்டம் ஒருபுறம்.

கண்முன்னே கொலை நடந்தாலும் சரி, கொள்ளை நடந்தாலும் சரி கற்பழிப்பு என்றாலும் சரி நமக்கென்னவென்று வேடிக்கைப் பார்க்கும் கோழைத்தனமானக் கூட்டம் ஒருபுறம்.

மறதி மட்டுமல்ல வேடிக்கைப் பார்ப்பதும் நம் நாட்டின் தேசிய வியாதியாகிவிட்டது. வேடிக்கைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு செயலில் இறங்கிவிட்டால் பாதிக் குற்றங்கள் குறைந்துவிடும். தவறுச் செய்பவர்களின் எண்ணிக்கைக் குறைகிறதோ இல்லையோ கண்டிப்பாகத் தவறுகளின் எண்ணிக்கைக் குறைந்துவிடும்.

தவறைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கும் நாம் கோழைத்தனமானவர்கள் மட்டுமல்ல நாமும் குற்றவாளிகள் தான்.

தவறுச் செய்பவர்கள் மட்டுமல்ல நாமும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.

நடுரோட்டில் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்யுமளவிற்கு, மேலும் அதை எந்தவித எதிர்ப்புணர்ச்சியும் இல்லாமல் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கும் அளவிற்கு மானங்கெட்ட அசிங்கமான கேவலமான மனச்சாட்சியைத் தொலைத்த மனிதத் தன்மையை இழந்துவிட்ட ஜடங்களாகிவிட்டோமா நாம்...?

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...