என் பேரும் தங்கம்
உன் பேரும் தங்கம்
பேரு தான் தங்கம்
ஆனா நாம என்னைக்கி
வீட்ல தங்கறது
பாதி வாழ்நாள்
எனக்கு அடுப்பங்கரையில
உனக்கோ அடகுக் கடையில
அந்தக் குடிகார மனுசன்
என்ன கட்டிக்கிட்டு
அவன் அல்பாயிசில போயிட்டான்
இப்ப
எப்படி இருக்க
சாப்பிட்டியா' ன்னு கேக்க
எனக்கொரு நாதியில்ல
அவசரத்துக்கு வச்ச
உன்னைய மீக்கறதுக்கோ
என்கைல காசில்ல
நான் பொண்ணா பொறந்ததும்
நீ பொன்னா வந்ததும்
அவமானத்துக்கும்
அடமானத்துக்கும்
தானா...!!!
கார்த்திக் பிரகாசம்...
உன் பேரும் தங்கம்
பேரு தான் தங்கம்
ஆனா நாம என்னைக்கி
வீட்ல தங்கறது
பாதி வாழ்நாள்
எனக்கு அடுப்பங்கரையில
உனக்கோ அடகுக் கடையில
அந்தக் குடிகார மனுசன்
என்ன கட்டிக்கிட்டு
அவன் அல்பாயிசில போயிட்டான்
இப்ப
எப்படி இருக்க
சாப்பிட்டியா' ன்னு கேக்க
எனக்கொரு நாதியில்ல
அவசரத்துக்கு வச்ச
உன்னைய மீக்கறதுக்கோ
என்கைல காசில்ல
நான் பொண்ணா பொறந்ததும்
நீ பொன்னா வந்ததும்
அவமானத்துக்கும்
அடமானத்துக்கும்
தானா...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment