வெகுநாட்களாகச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இடம். ஆனால் என்னவோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று கண்டிப்பாகச் சென்றுவிடுவது என்று காலையிலேயே கிளம்பிவிட்டேன். ஒருநாள் பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டு திருப்பெரும்புதூர் பேருந்தில் ஏறினேன்.பள்ளிக்கு ஆசிரியர் வராத நாளில் பிள்ளைகள் குதூகலத்தில் மிதப்பது போல சூரியன் விடுமுறை எடுத்துக் கொண்டதனால் எந்தக் கட்டுப்பாடுமின்றி மேகங்கள் உறங்குவதும் தூறலைச் சிந்துவதும் நிறுத்துவதுமாக வானில் விளையாடி ரம்மியமான சீதோஷ்ணநிலையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரத்திற்கு மேலாக இருந்த பயணம். பயணத்தின் போது இருந்த மனநிலை நினைவகத்தை அடைந்த போது இருக்கவில்லை. கற்களில் பொறிக்கப்பட்ட "ராஜிவ் காந்தி நினைவகம்" என்ற வாசகத்தைப் பார்த்ததும் மனதளவில் ஒரு தாக்கம். பின்னே வெறுமனே ஒரு தலைவரின் நினைவகம் என்றளவில் ராஜீவ் காந்தியின் நினைவகத்தைக் கடந்து விடமுடியாதே..! அதற்கு பின்னால் ஓர் இனம் அனுபவித்தக் கொடுமைகளும், அரசியல் துரோகத்திற்கு அவர்கள் கொடுத்த விலைமதிப்பில்லாத உயிர்களும், ரத்தத் துளிகளும் கட்டுப்படுத்தயியலா ...