அவளுக்கு சினிமா பார்ப்பது என்றால் அவ்வளவு இஷ்டம். சிறுவயதில் இருந்தே எப்பொழுதும் அம்மாவிடம் சினிமாவிற்கு கூட்டிப் போகச் சொல்லி அடம் பிடித்துக் கொண்டே இருப்பாள்.
"பொறந்தது ஒரே ஒரு புள்ள. சீவி சிங்காரிச்சி நாலு எடத்துக்கு போயிட்டு வந்திட்டு இருந்தா ஊரு கண்ணு எப்பவும் ஒரே மாதிரி இருக்குமா...!பொம்பள புள்ளனா பொத்தி பொத்தி வளத்தனும். ஊரு கண்ணு படர மாதிரி வளத்தக் கூடாது" என்று அவளின் பெற்றோர்கள் அவளைச் சினிமாவிற்கு அழைத்துச் சென்றதே இல்லை. அவர்களும் போனதில்லை.அது வேறு விஷயம்.
தியேட்டரில் ரஜினி படங்களை ரகளையாக விசிலடித்துப் பார்ப்பதாகவும், அழுகைக் காட்சிகளில் அவள் மட்டும் கதாநாயகியின் நிலையைக் கண்டு தனியாளாக வருத்தப்படுவதாகவும் அடிக்கடி கனவுகள் வரும். சில நேரங்களில் கனவுகளோடு கண்ணீரும் வந்திருக்கும். மறுக்கப்பட்டே வளர்ந்ததாலோ என்னவோ அவளின் மனதில் சினிமாவிற்கு சென்று படம் பார்ப்பது பெரிய லட்சியமாகவே உருமாறியிருந்தது.
கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை தோழியோடு செல்லலாம் என்று திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்தாள். மதிய வகுப்பை மட்டம் போட்டுவிட்டு செல்கையில் பாதிவழியிலேயே அவளுடைய அப்பா பார்த்துவிட்டார்.
"இந்த நேரத்தில இங்க என்ன பண்ற" என்றார் அப்பா..
"பயத்தின் உச்சியில் இருந்த அவளுக்கு வார்த்தையே வரவில்லை.. ஏதேதோ பொய் சொல்லி ஒருவழியாக சமாளித்தாள்"
சரி வா..! வீட்டிற்கு போலாம் என்று அவருடனே அழைத்துச் சென்றுவிட்டார்.
அவ்வளவுதான்...! எமகண்டத்தில் இருந்தது தப்பித்தது போல் இருந்தது அவளுக்கு.அதோடு அம்மாதிரியான முயற்சிகளைக் கைவிட்டுவிட்டாள்..
கல்லூரி படிப்பை முடித்தாள். வீட்டில் கல்யாணப் பேச்சு தொடங்கியது. அவளின் விருப்பத்தைப் பெரிதும் எதிர்பார்க்காமல் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர்.
திருமணம் முடிந்தது. முதலிரவு அறையில் கணவன் அமர்ந்திருந்தான். அவள் உள்ளே சென்றாள். பேச்சு கொடுப்பதற்காகச் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் தலையசைவில் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
சிறிதுநேரம் கழித்து "நீ ஏதாவது கேளேன்..!" என்றான்.
சிறிதும் யோசிக்காமல் நாளைக்கு என்னை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போறிங்களா..? என்றாள்.
விளக்கு அணைக்கப்பட்டது...!!! இருள் நிறைந்தது...!!!
அன்றைய இரவு அறையிலும் அடுத்த நாள் சினிமாவிலும்..!!
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment