வெகுநாட்களாகச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இடம். ஆனால் என்னவோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று கண்டிப்பாகச் சென்றுவிடுவது என்று காலையிலேயே கிளம்பிவிட்டேன். ஒருநாள் பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டு திருப்பெரும்புதூர் பேருந்தில் ஏறினேன்.பள்ளிக்கு ஆசிரியர் வராத நாளில் பிள்ளைகள் குதூகலத்தில் மிதப்பது போல சூரியன் விடுமுறை எடுத்துக் கொண்டதனால் எந்தக் கட்டுப்பாடுமின்றி மேகங்கள் உறங்குவதும் தூறலைச் சிந்துவதும் நிறுத்துவதுமாக வானில் விளையாடி ரம்மியமான சீதோஷ்ணநிலையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரத்திற்கு மேலாக இருந்த பயணம்.
பயணத்தின் போது இருந்த மனநிலை நினைவகத்தை அடைந்த போது இருக்கவில்லை. கற்களில் பொறிக்கப்பட்ட "ராஜிவ் காந்தி நினைவகம்" என்ற வாசகத்தைப் பார்த்ததும் மனதளவில் ஒரு தாக்கம். பின்னே வெறுமனே ஒரு தலைவரின் நினைவகம் என்றளவில் ராஜீவ் காந்தியின் நினைவகத்தைக் கடந்து விடமுடியாதே..! அதற்கு பின்னால் ஓர் இனம் அனுபவித்தக் கொடுமைகளும், அரசியல் துரோகத்திற்கு அவர்கள் கொடுத்த விலைமதிப்பில்லாத உயிர்களும், ரத்தத் துளிகளும் கட்டுப்படுத்தயியலா கோபமும் அழிக்கமுடியா அடையாளமாக வரலாற்று காயமாக அந்த இருந்த இடத்தில் பொதிந்துள்ளதே...! சாந்தன் முருகன் பேரறிவாளன் நளினி ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ராபர்ட் பயஸ் உள்ளிட்ட எழுவரின் கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்தைச் சிறைச்சாலையில் இருத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறதே...! விடை தெரியா பல கேள்விகளை இன்னும் தன்னுள் புதைத்து வைத்துள்ளதே...!
மே 21, 1991 அன்றிரவு நடந்ததைக் கண்முன்னே காட்சிகளாய் விரிக்கும்பொருட்டு கல்வெட்டுகளும் குறியீடுகளும் அமைக்கப் பெற்றுள்ளன. அன்றைய நாளில் தன் தாயாரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மேடைநோக்கி நடந்துச் சென்ற பாதையை இறுதிப் பயணமாகக் குறிக்கும் பொருட்டு அப்பாதை விரிந்து தொடங்கி கடைசியாக மேடையில் நின்ற இடத்தை நோக்கிச் செல்ல செல்ல குறுகி முடிகிறது. ரத்தம் சிந்திய இடத்தில் அவரது திருவுருவத்தைச் சுற்றிலும் அறம்,வாய்மை,நீதி,அறிவு, தியாகம், அமைதி மற்றும் வளம் என ஏழு லட்சியங்களைக் குறிக்கும் வகையில் ஏழு தூண்கள் சூழ்ந்திருக்கின்றன..தூண்கள் சூழ்ந்திருக்கும் பகுதி மட்டுமில்லாமல் மொத்த நினைவகமுமே புற்களால் குளித்து பசுமையாக புன்னகைக்கிறது..
அவை ரத்தத்தில் முளைத்த புற்கள். ஆனால் அந்த ரத்தம் ராஜீவ் காந்தியினுடையது மட்டுமல்ல...!
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment