பள்ளி ப்ரேயரில் என் வகுப்பின் வரிசைக்கு எப்பொழுதும் நான்தான் முதல் ஆளாக நிற்பேன் . எங்கோ பின்னால் நின்றுக் கொண்டிருந்தாலும் வகுப்பாசிரியர் கூப்பிட்டு முதல் ஆளாக நிற்க வைத்துவிடுவார். அப்பொழுதெல்லாம் ஆசிரியரே கூப்பிட்டு முன்னால் நிற்க வைக்கிறாரே என்று பெருமையாக இருக்கும். யாருக்கும் கிடைக்காத அங்கீகாரம் எனக்குத் தேடி வருவதாகத் தோன்றும். மேடையிலிருந்து தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து பேசுவது போலவே இருக்கும். ஒரு பெருமித போதை தலைக்கேறும். அதை அனுபவிப்பதற்காகவே பெரும்பாலும் விடுமுறை எடுக்கமாட்டேன். ப்ரேயருக்கும் தாமதமாகச் செல்லமாட்டேன். அப்படியொரு போதையோடுதான் வெகுநாட்கள் பள்ளியில் சுற்றிக் கொண்டிருந்தேன். பின்புதான் புரிந்தது நான் தான் வகுப்பிலேயே உயரம் குறைவாக இருக்கிறேன் அதனால்தான் எந்த ஆசிரியராக இருந்தாலும் என்னைக் கூப்பிட்டு முதல் ஆளாக நிற்க வைக்கிறார்கள் என்று.
சில நாட்களில் "கூலையா" என்பது பட்டப் பெயராகிவிட்டது. அதுவும் வகுப்பில் பல கார்த்திக்குகள் இருந்ததனால் "கூலையன் கார்த்திக்" என்பதே பாசப் பெயராகவும் நிலைத்துவிட்டது.
என்னைவிட ஒருவன் உயரம் குறைவாக இருப்பான் ஆனால் அவனும் என்னை "கூலையா" என்றுதான் கூப்பிடுவான்.
பள்ளி நண்பன் ஒருவன் வெகுநாட்களுக்குப் பிறகு அலைபேசினான்.
சொல்லு டா மாப்ள." எப்படி இருக்க..
நான் நல்ல இருக்கேன் டா கூலையா..! நீ எப்படி இருக்க..
மாப்ள நான் இப்போ வளந்துட்டேன் டா...!
சூப்பர்'டா கூலையா..
டேய்.. இப்போதான சொன்னேன் நான் வளந்துட்டேனு மறுபடியும் கூலையான்னு சொல்ற..
வளந்தாலும் வளரலன்னாலும் எனக்கு நீ கூலையன் தான் டா கூலையா. ஊருக்கு வரும் போது போன் பண்ணு என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment