அதிகாலை
இளம்பனியில்
புறாவொன்று
வீட்டிற்குள் வந்திருந்தது..!
எப்படி உட்புகுந்ததென்று
தெரியவில்லை..!
வழித் தேடி வந்ததா
வழித் தவறி வந்ததா
புரியவில்லை..!
என்னைப் பார்த்து
பதறவுமில்லை
பயப்படவுமில்லை..!
ஆனால் சொல்லாமல் வந்த
விருந்தாளி போல
கண்களில் ஒரு தயக்கம்..!
நேராக குசினிக்குள் சென்று
சிறகுகளுக்கு வலிக்காமல்
கால்களை மடக்கி
அமர்ந்து கொண்டது..!
யாருக்குத் தெரியும்
முன்பொரு காலத்தில்
இந்த வீடு
அந்தப்
புறாவின் கூடாக
இருந்திருக்கலாம்...!
கார்த்திக் பிரகாசம்...
இளம்பனியில்
புறாவொன்று
வீட்டிற்குள் வந்திருந்தது..!
எப்படி உட்புகுந்ததென்று
தெரியவில்லை..!
வழித் தேடி வந்ததா
வழித் தவறி வந்ததா
புரியவில்லை..!
என்னைப் பார்த்து
பதறவுமில்லை
பயப்படவுமில்லை..!
ஆனால் சொல்லாமல் வந்த
விருந்தாளி போல
கண்களில் ஒரு தயக்கம்..!
நேராக குசினிக்குள் சென்று
சிறகுகளுக்கு வலிக்காமல்
கால்களை மடக்கி
அமர்ந்து கொண்டது..!
யாருக்குத் தெரியும்
முன்பொரு காலத்தில்
இந்த வீடு
அந்தப்
புறாவின் கூடாக
இருந்திருக்கலாம்...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment