அவள் தைரியமானவள்..!
எப்பொழுது கண்ணிமையைத்
தொட வேண்டும்
எப்பொழுது கன்னங்களை
நனைக்க வேண்டுமென்று
கண்ணீருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறாள்..!
அவள் தைரியமானவள்..!
சொல்ல தேவையில்லா கதைகளையும்
சொல்லியும் ப்ரோஜனமில்லா ரகசியங்களையும்
சிரிப்பென்ற கதவால் அடைத்து
பூட்டி வைத்திருக்கிறாள்..!
அவள் தைரியமானவள்..!
தேடித் தேடி வந்தவன்
திரும்பித் திரும்பிப் பார்த்தவன்
திரும்பத் திரும்பப் பேசியவன்
திடீரென்று ஒருநாள் தொலைந்த போதிலும்
கொண்ட காதலை
கொன்று விடாமல்
வெளியுலகை வேடிக்கைப் பார்த்து
அகவுலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்..!
அவள் தைரியமானவள்..!
கார்த்திக் பிரகாசம்...
எப்பொழுது கண்ணிமையைத்
தொட வேண்டும்
எப்பொழுது கன்னங்களை
நனைக்க வேண்டுமென்று
கண்ணீருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறாள்..!
அவள் தைரியமானவள்..!
சொல்ல தேவையில்லா கதைகளையும்
சொல்லியும் ப்ரோஜனமில்லா ரகசியங்களையும்
சிரிப்பென்ற கதவால் அடைத்து
பூட்டி வைத்திருக்கிறாள்..!
அவள் தைரியமானவள்..!
தேடித் தேடி வந்தவன்
திரும்பித் திரும்பிப் பார்த்தவன்
திரும்பத் திரும்பப் பேசியவன்
திடீரென்று ஒருநாள் தொலைந்த போதிலும்
கொண்ட காதலை
கொன்று விடாமல்
வெளியுலகை வேடிக்கைப் பார்த்து
அகவுலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்..!
அவள் தைரியமானவள்..!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment