அம்மாவிடம் இருக்கும் நெருக்கம் பெரும்பாலானோருக்கு அப்பாவிடம் ஏற்படுவதில்லை. அப்பா என்ற பிம்பம் அப்படியொரு இடைவெளியை தன்னிச்சையாக உண்டாக்கிவிடுகிறது. அதிலும் குறிப்பாக மகன்களுக்கு.
அலுவலக நண்பரின் அப்பா சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு சமயம் நானும் அவரும் பேசிக் கொண்டிருக்கையில் பேச்சு தானாகவே அவருடைய அப்பாவைப் பற்றித் திரும்பியது. ஒரு செயலிலோ அல்லது நடத்தையிலோ கூட அப்பாவை அவர் குறைபட்டுக் கொள்ளவில்லை. நேர்மறையாகவே சொல்லிக் கொண்டிருந்தார். அதை வெறுமனே சொல்லவில்லை என்பதும் அவருடைய கண்களில் தெரிந்தது.
அப்பா என்ன செய்தாரோ அதோடு அப்பாவிடமிருந்து எனக்கு என்ன கிடைக்கலையோ அதையும் சேர்த்து என் மகனுக்குச் செய்ய வேண்டும் என்றார்.
"அப்பாவிடமிருந்து உங்களுக்கு என்ன கிடைக்கவில்லை.." ஏதோ ஒன்று சொல்லுங்கள் என்றுக் கேட்டேன்.
நான் இன்னைக்கி ஓரளவுக்கு நல்ல நிலைமையில இருக்கண்ணா அதுக்கு எங்கப்பா தான் காரணம். ஆனா "எங்க அப்பாவ நான் கட்டிபிடிச்சதே இல்ல" அதனால தினமும் என் மகன்கிட்ட என்ன கட்டிபிடிக்கச் சொல்லிக் கேட்குறேன்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment