சென்று வருகிறேன்...!
எனக்கு
தேவையானதை
நான்
தேர்ந்தெடுக்க
எனக்கெதற்கு
தேவையில்லாத
இந்த தேர்வு.!
நான்
மருத்துவம் கற்க
விரும்பியது
பணம் காசு சம்பாதிக்க
அல்லவே.!
மற்ற உயிர்களைக்
காப்பற்ற எண்ணியே..!
மற்ற உயிர்களைக்
காப்பாற்ற
எண்ணிய என்னுயிர்
இன்றெங்கே..!
என் பிணத்தின் மீது
சாதியைப் போர்த்தி
சார்ந்து நிற்கும்
சாக்கடைப் புழுக்களினும் கீழான
அரசியல் வேசிகளே
ஊடக மூடர்களே
நான் மருத்துவராக விரும்பியது
உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்து
வைத்தியம் பார்க்கத் தான்..!
உயிரோடிருக்கும் வரை
நீதி கிடைக்காத
நாட்டில் செத்தவுடன்
நிதி கிடைப்பது
வேதனை..!
நிதியையும்
சாதியையும் வீசி
நான் உயிர் ஈன்றதை
கொச்சையாக்காதீர்கள்..!
கடைசியாக ஒன்று
நான் தற்கொலை செய்து
கொள்ளவில்லை
நீங்கள் தர மறுத்த நீதி
என்னை கொலை
செய்துவிட்டது..!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment