உன்னை
நான்
பார்ப்பதே
அரிதினும் அரிது..!
அதையும் மீறி வந்தாலும்
ஒருநாள் கூட
தங்கமாட்டாய்
வந்த வேகத்தில்
திசையறிமால் திரும்பிச்
சென்றுவிடுவாய்..!
இந்தமுறை மட்டுமென்ன
இவ்வளவு பாசம்
இரண்டு நாட்களாக
நிமிடம் அகலாமல்
அண்டிக் கிடைக்கிறாயே..!
என்மேல் பாசமா
இல்லை
எப்பொழுதும்
இருந்திடாத
சென்னையின் இந்த மாறுபட்ட
காலநிலையின் மீது
காதல்
கொண்டுவிட்டாயா..!
வெறுமனே கையைக்
கொடுத்துச் செல்பவன்
இந்தமுறை நகரவிடாமல்
கட்டியணைத்துக்
கிடக்கிறாயே..!
நீ வரும்போதெல்லாம்
வெகு சீக்கிரம்
விரட்ட நினைப்பவன்
இந்தமுறை
அதற்கும் சக்தியற்றுக் கிடக்கிறேன்..!
இந்த வாரம்
நீ வருவாய் என்றறியாமால்
சென்ற வாரமே வேறு
அலுவலகத்திற்கு
இரண்டு நாட்கள்
விடுப்பு எடுத்துவிட்டேன்..!
மறுபடியும் விடுப்புக் கேட்டால்
வெகுண்டெழுவார்கள்..!
அது சரி..!!
அஜைல் டெக்னாலஜி பற்றியெல்லாம்
உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை..!
என் புலம்பல்கள் ஒருபுறம் இருக்கட்டும்
இந்தமுறை உனைநான் எனக்காகப்
பயன்படுத்திக் கொள்கிறேன்..!
ஆம்..!
மனதளவிலும்
உடலளவிலும்
எனக்கும்
கொஞ்சம் ஓய்வுத் தேவைப்படுகிறது...!
வந்தது வந்துவிட்டாய்
ஊசிப் போட்டு உன்னைத்
துரத்த விரும்பவில்லை
மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்...!
ஆனால்
நாளை இரவுக்குள்
நீ எனைவிட்டுச் சென்றுவிடவேண்டும்...!
உன் மீதான
நம்பிக்கையின் பேரில்
இந்த இரவுப் பயணத்தை
கசந்தே துவங்குகிறேன்...!
காய்ச்சலே.!
காலையில்
கண் விழிப்பதற்குள்
என்னைவிட்டு
கசிந்துவிடு.!
கார்த்திக் பிரகாசம்...
நான்
பார்ப்பதே
அரிதினும் அரிது..!
அதையும் மீறி வந்தாலும்
ஒருநாள் கூட
தங்கமாட்டாய்
வந்த வேகத்தில்
திசையறிமால் திரும்பிச்
சென்றுவிடுவாய்..!
இந்தமுறை மட்டுமென்ன
இவ்வளவு பாசம்
இரண்டு நாட்களாக
நிமிடம் அகலாமல்
அண்டிக் கிடைக்கிறாயே..!
என்மேல் பாசமா
இல்லை
எப்பொழுதும்
இருந்திடாத
சென்னையின் இந்த மாறுபட்ட
காலநிலையின் மீது
காதல்
கொண்டுவிட்டாயா..!
வெறுமனே கையைக்
கொடுத்துச் செல்பவன்
இந்தமுறை நகரவிடாமல்
கட்டியணைத்துக்
கிடக்கிறாயே..!
நீ வரும்போதெல்லாம்
வெகு சீக்கிரம்
விரட்ட நினைப்பவன்
இந்தமுறை
அதற்கும் சக்தியற்றுக் கிடக்கிறேன்..!
இந்த வாரம்
நீ வருவாய் என்றறியாமால்
சென்ற வாரமே வேறு
அலுவலகத்திற்கு
இரண்டு நாட்கள்
விடுப்பு எடுத்துவிட்டேன்..!
மறுபடியும் விடுப்புக் கேட்டால்
வெகுண்டெழுவார்கள்..!
அது சரி..!!
அஜைல் டெக்னாலஜி பற்றியெல்லாம்
உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை..!
என் புலம்பல்கள் ஒருபுறம் இருக்கட்டும்
இந்தமுறை உனைநான் எனக்காகப்
பயன்படுத்திக் கொள்கிறேன்..!
ஆம்..!
மனதளவிலும்
உடலளவிலும்
எனக்கும்
கொஞ்சம் ஓய்வுத் தேவைப்படுகிறது...!
வந்தது வந்துவிட்டாய்
ஊசிப் போட்டு உன்னைத்
துரத்த விரும்பவில்லை
மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்...!
ஆனால்
நாளை இரவுக்குள்
நீ எனைவிட்டுச் சென்றுவிடவேண்டும்...!
உன் மீதான
நம்பிக்கையின் பேரில்
இந்த இரவுப் பயணத்தை
கசந்தே துவங்குகிறேன்...!
காய்ச்சலே.!
காலையில்
கண் விழிப்பதற்குள்
என்னைவிட்டு
கசிந்துவிடு.!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment