"நான் கிளம்புகிறேன்" என்றுச் சொல்லும் அந்தவொரு நிமிடத்திற்காக இரண்டு மணி நேரத்திற்கு முன்பிருந்தே மனதளவில் தயாராகிக் கொண்டிருப்பேன். வீட்டை விட்டு வெளியூருக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும்கூட அவர்கள் கண் கலங்காமல் என்னை ஒருபோதும் வழியனுப்பியதில்லை. அதற்காகவே கிளம்பும் போது பெரும்பாலும் அம்மா அப்பாவின் கண்களைச் சந்திப்பதைத் தவிர்க்கப் போராடுவேன். ஒருவேளை கண்களைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். மனது பலவீனப்பட்டு உடைந்து போகும். இமைகள் நனையும். கண்ணீரை மறைக்க முடியாமல் கண்கள் தவிக்கும்.
"பாத்து போ.. ஒழுங்கா சாப்பிடு.. டீ குடிச்சிகிட்டே சாப்பாட்ட மறந்துட்டு சுத்தாத.. நைட் ரொம்ப நேரம் முழிச்சிகிட்டு இருக்காத.. சாப்புட்டு சீக்கிரம் தூங்கிப் பழகு.. போய்ட்டு போன் பண்ணு" என்று இதழ்களுக்கு ஓய்வளிக்காமல் கன்னங்கள் நனைய பாசவார்த்தைகளால் அணைத்துக் கொண்டே இருப்பாள் அம்மா.
மறுபுறம் அப்பா, "கண்ணு, கைல காசு இல்லனா போன் பண்ணு. அக்கௌன்ட்'ல உடனே போட்டுவுடறேன். எப்படிடா அப்பாகிட்ட கேக்கிறதுனு பட்டினியோட கெடக்காத.. என்ன சரியா..?" என்பார்.
சரிப்பா..! கிளம்பலாம்.. மணி ஆச்சு என்பேன்.
வீட்டிலிருந்து ரயில் நிலையத்தை அடையும் அந்த பத்து பதினைந்து நிமிடங்களில் தன் முக்கால்வாசி வாழ்க்கையைச் சொல்லி முடித்திருப்பார் அப்பா.எத்தனையோ முறை கேட்டதும் பார்த்ததும் தான். இருந்தாலும் காரணமில்லாமல் மனது படபடக்கும். இதயம் இயல்பை மீறி துடிக்கும். பனிக்கட்டியைப் போல உள்ளங்கை விறைக்கும். ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு கையில் இருக்கும் சில்லறை நோட்டுக்களை எடுத்து, "இந்தா, வழி'ல செலவுக்கு வச்சுக்கோ" என்று கையில் திணித்துவிட்டு கைலியில் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்வார்.
"நான் பெரிய மனுசனாகிவிட்டேன்" என்ற எண்ணம், என் கண்ணீரை மறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் போது பெரியவர்களான அவர்கள் என்னை பிரியப் போவதற்காக குழந்தைகளாக மாறிக் கண்முன்னே கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்.
அதுவரையில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அந்தவொரு நிமிடத்தில் அலைகடலென ஆர்ப்பரிக்கும். கால்கள் நடுங்கும். கண்ணீரைக்கூட துடைக்க முடியாமல் கைகள் திராணியற்றுப் போகும். திரும்பிப் பார்த்தால், " அப்பா வெகுதூரம் சென்றிருப்பார்".
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment