காதலை
முதலில் நீ சொன்னதாய் தான்
ஞாபகம்
பிரச்சினைகள் வருமென்றறிந்தும்
எனக்கும் உன்மீது
காதல் வந்தது
மனமொத்து நின்றோம்
மதம் குறுக்கிட்டது
சாகும்வரை ஒன்றாகத் தான்
என்றோம்
அப்படியென்றால் உடனே சாகுங்களென்று
சமாதியுடன் தயாராய்
சந்தியில் நின்றது
சாதி
ஆனால் நாம் உறுதியாக இருந்தோம்
ஒரு கட்டத்துக்கு மேல்
நம் பிணைப்பை பார்த்து
பெற்றோர்கள் பயந்தனர்
உறவுகள் வியந்தனர்
ஒருவழியாக மனமிறங்கவும் செய்தனர்
நீ ஆசைப்பட்ட படி
அனைவரின் ஆசீர்வாதத்துடன்
நம் திருமணம் இனிதே
நடந்தேறியது
இப்படியெல்லாம் நடந்திருந்தால்
நன்றாகத் தான் இருந்திருக்கும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment