மித்ரன் முகத்தைத் தொங்கப் போட்டு கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக நடந்து வந்தான்.
முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது ஏதோ சரியில்லை என்று. "என்ன பிரச்சனை..?" ராகவி கேட்டாள்.
மித்ரன் பதிலேதும் சொல்லவில்லை.
அவனின் கைகளைப் பற்றி "என்ன நடந்தது சொல் என்றாள்.?" ராகவி.
அவன் மீண்டும் மௌனத்தையே பதிலாகத் தந்தான்.
இருவரும் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தனர்.
மித்ரன் நிமிர்ந்தான். அவளின் முன்னால் கண்ணீர் சிந்திவிடக் கூடாது என்று பெரும் பிரயத்தனப்பட்டான். அழுகையைக் கட்டுப்படுத்திட முயன்றான். ஆனால் முடியவில்லை கடைசியில் கண்ணீரைச் சிந்தினான்.
ராகவி திடுக்கிற்று எழுந்தாள். ஆனால் வார்த்தை ஏதும் பேசவில்லை.
எதிரில் அமர்ந்திருந்த அவனை அழைத்து அவளருகில் அமர்த்திக் கொண்டாள். இடது கரத்தை தோளில் போட்டு அவனைத் தன் மார்போடு அணைத்தாள்.
மித்ரனின் கன்னங்களில் அவனுடையதல்லாமல் மற்றொரு கண்ணின் துளியும் உருண்டோடியது. நிமிர்ந்து பார்த்தான். ராகவியின் கண்களும் கண்ணீரை உதிர்த்திருந்தன.
அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவனுக்கு தன் மார்பில் அடைக்கலம் அளித்தாள் ராகவி.
கலந்திருந்த நான்கு கண்களின் கண்ணீர்த் துளிகளில் அன்றைய இரவு மெல்லக் கசிந்துக் கொண்டிருந்தது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment