எழுபத்திரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் தகழி.சிவசங்கரப் பிள்ளை எழுதிய, தமிழில் சுந்தர ராமசாமி அவர்களால் மொழிப் பெயர்க்கப்பட்ட நாவல் 'தோட்டியின் மகன்'. "தான் செய்யும் தோட்டி வேலை தன் மகனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு தந்தை. நான் ஒரு தோட்டியாக இருக்கலாம் ஆனால் என் மகன் கண்டிப்பாகத் ஒரு தோட்டியாகிவிட கூடாது என்ற வைராகியத்தோடு வாழும் இன்னொரு தந்தை. தோட்டி என்றொரு சமூகத்தை உருவாக்கி அவர்களின் அறியாமையையும், இயலாமையையும் தங்களின் மூல கருவிகளாக்கிக் கொண்டு அவர்களை சிதறவிடாமல், சிந்திக்கவிடாமல், யோசிக்கவிடாமல் முன்னேறவிடாமல் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் அடிமையாக வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தினர். மர்மக் காய்ச்சலோ, நோயோ வந்து நிறைய மனிதர்கள் இறந்துவிட்டால் கவலையே இல்லாமல் தோட்டி வேலைக்கு அதாவது தங்களின் மலத்தை அள்ளிச் சுத்தம் செய்ய வேண்டி வேறு ஊர்களில் இருந்து புதிதாக ஆட்களைக் கொண்டு வரும் மேல்தட்டு அதிகார வர்க்கம்" என்று ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மனக் கொந்தளிப்புகளை, ஏக்கங்களை, ஆதங்கங்களை மற்றும் அவர்களின் மீது கட்...