என்றும் போலவே
அன்றும் பொழுது புலர்ந்தது
எனினும் அன்றைய நாள்
என்றும் போல முடியவில்லை
பூக்கள் ராகங்கள் பாட
காலை கதிரவன் உன்னை
எனக்குள்
அழைத்து வந்தது
உன்னைச் சந்தித்தேன்
மூர்ச்சையானேன்
மூச்சுவிடவும் சிரமம் கொண்டேன்
நேரத்தோடு முரண்பட்டேன்
சிந்தித்திடாத இன்பங்களைச்
சந்தித்தேன்
சந்தித்திருந்த வேதனைகளையெல்லாம்
நிந்தித்தேன்
உன்னை என்னிடமே விட்டுவிட்டு
என்னை வேறெங்கோவொரு
புது பூமியில் புகுத்தியது
அன்றைய இரவு
அதன்பின்
பல பகல் இரவுகள்
பறந்துவிட்டன
ஆனால்
அந்தவொரு
பகலிரவு மட்டும்
உள்ளத்தில் உறைந்து
உதிரத்தில் கலந்து
உயிருக்குள் ஊடுருவிக்
கொண்டது...!!!
ஐந்து பத்து வருடங்களல்ல
ஆயுசுக்கும்
மறக்காது நாம்
சந்தித்த நாள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
அன்றும் பொழுது புலர்ந்தது
எனினும் அன்றைய நாள்
என்றும் போல முடியவில்லை
பூக்கள் ராகங்கள் பாட
காலை கதிரவன் உன்னை
எனக்குள்
அழைத்து வந்தது
உன்னைச் சந்தித்தேன்
மூர்ச்சையானேன்
மூச்சுவிடவும் சிரமம் கொண்டேன்
நேரத்தோடு முரண்பட்டேன்
சிந்தித்திடாத இன்பங்களைச்
சந்தித்தேன்
சந்தித்திருந்த வேதனைகளையெல்லாம்
நிந்தித்தேன்
உன்னை என்னிடமே விட்டுவிட்டு
என்னை வேறெங்கோவொரு
புது பூமியில் புகுத்தியது
அன்றைய இரவு
அதன்பின்
பல பகல் இரவுகள்
பறந்துவிட்டன
ஆனால்
அந்தவொரு
பகலிரவு மட்டும்
உள்ளத்தில் உறைந்து
உதிரத்தில் கலந்து
உயிருக்குள் ஊடுருவிக்
கொண்டது...!!!
ஐந்து பத்து வருடங்களல்ல
ஆயுசுக்கும்
மறக்காது நாம்
சந்தித்த நாள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment