உண்மை அல்லது உண்மைக்கு வெகு அருகாமையில் இருக்கக் கூடிய சமூகத்தின் நிகழ்வுகளை ஒரு துப்பறியும் நாவலின் மூலம் அலசியிருக்கிறார் இரா.முருகவேள்.
மர்மமான முறையில் இறந்துக் கிடக்கும் சடலத்தின் மீதான போலீஸ் விசாரணையுடன் தொடங்குகிறது நாவல். பின்பு அது "தலித், ஆதிக்கச் சாதி,மேல் சாதி, வேலை இல்லாமல் போன விவசாயம் அதனால் அதிகமான கைத்தறிக் கூடங்கள், நவீன கொத்தடிமை முறை, ஸ்பினிங் மில்களில் நிகழும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், வன்கொடுமைச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்,அதில் ஒழிந்திருக்கும் ஓட்டைகள், பெண் வாரிசுரிமை, சாதிச் சங்கங்களின் ஆதிக்கம், குலப்பெருமையைக் காப்பதாய் பெண்களை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேல்சாதி ஆண்கள்" என ஒரே புள்ளியை நோக்கி பல்வேறு கோணங்களில் விரிகிறது.
'தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்து ஏதாவதொரு வழியில் போராடும் பாஸ்கர்', சாதிச் சங்கத் தலைவரான மனோகரன், "பெரும்பாலான கிராமப் புறங்களில் பள்ளிக்கூடங்கள் மேல்சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருக்கிறது ஆனால் அங்கு பெரும்பாலும் பயில்வது என்னவோ பிற்படுத்தப்பட்ட. மற்றும் தலித் மாணவர்கள்தான் ஏனென்றால் மேல்சாதியினர் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். மற்றும் கல்லூரிகளில் பெண்களிடம் பேசுவதற்கே யோசிப்பது. தன் சாதியை வெளிப்படையாகச் சொல்ல மறுப்பவன் கண்டிப்பாக ஒரு தலித்தாக தான் இருப்பான் என்று புரையோடிக் கிடக்கும் சமூகத்தின் ஒடுக்கும் மனப்பான்மை பார்வை என அடித்தளத்தில் இருந்து சாதியின் உக்கிரகங்களை அடிக்கோடிட்டு காட்டும் பாஸ்கரின் நண்பனான இளங்கோ" என்று சமூகத்தின் பிரதிபிம்பங்களாய் கட்டியமைக்கப்பட்ட கதையின் மாந்தர்கள்.
அதேசமயம் கொங்கு பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட 'அருமைக்காரர்கள், வெள்ளையம்மாள் கதை, எழுதிங்கு சீர்' போன்ற இன்னும் சில கலாச்சார பழக்க வழக்கங்களும் நாட்டுப்புற கதைகளின் மூலமாக நினைவூட்டப்பட்டுள்ளது.
கார்த்திக் பிரகாசம்...
இப்போதுதான் பார்த்தேன். அருமையான மதிப்புரைக்கு மன்மார்ந்த நன்றி நண்பரே. இரா.முருகவேள்.
ReplyDelete