செத்த எலியை
இரத்தம் படிந்த செவ்வலகால்
கொத்திக் கொதறி ஓரமாக
இழுத்துக் கொண்டிருக்கின்றன
காக்கைகள்
தெருவோர குப்பைத்
தொட்டியில்
எஞ்சியிருந்த எச்சில் இலையின்
எலும்புத் துண்டைக் கைப்பற்ற
சத்தமாகக் குரைத்து
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன
தெரு நாய்கள்
வேப்ப மரத்தின்
உச்சிக் கிளையில்
சருகாகக் கிடந்த காய்ந்த
இலைகளைக் குத்திக் கொண்டிருக்கின்றன
புறாக்கள்
டீக்கடையின் வாசலில்
கிழிந்த சேலையில்
கையேந்தி நின்றுக் கொண்டிருக்கிறாள்
வயதான கிழவி
எல்லோரையும் மிஞ்சிய
அகோரப் பசியில்
அனலைக் கக்கிக் கொண்டிருக்கிறான்
கதிரவன்
கார்த்திக் பிரகாசம்...
இரத்தம் படிந்த செவ்வலகால்
கொத்திக் கொதறி ஓரமாக
இழுத்துக் கொண்டிருக்கின்றன
காக்கைகள்
தெருவோர குப்பைத்
தொட்டியில்
எஞ்சியிருந்த எச்சில் இலையின்
எலும்புத் துண்டைக் கைப்பற்ற
சத்தமாகக் குரைத்து
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன
தெரு நாய்கள்
வேப்ப மரத்தின்
உச்சிக் கிளையில்
சருகாகக் கிடந்த காய்ந்த
இலைகளைக் குத்திக் கொண்டிருக்கின்றன
புறாக்கள்
டீக்கடையின் வாசலில்
கிழிந்த சேலையில்
கையேந்தி நின்றுக் கொண்டிருக்கிறாள்
வயதான கிழவி
எல்லோரையும் மிஞ்சிய
அகோரப் பசியில்
அனலைக் கக்கிக் கொண்டிருக்கிறான்
கதிரவன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment