மகள் தன்
தந்தைக்கு எழுதுகிறாள்
அதிர்ந்து பேசியதில்லை
அதிகம் திட்டியதில்லை
கஷ்டத்தைச் சொல்லி புலம்பியதில்லை
கவலையை எண்ணி வருந்தியதில்லை
தாத்தன்
பெரியாரை கற்றறிந்ததில்லை
ஆனால்
பெண் பிள்ளையென்று எனக்கு
கட்டுப்பாடுகள்
விதித்ததில்லை
வயதாயிற்று
வதுவை
முடிக்க வேண்டுமென்று
வற்புறுத்தியதில்லை
என் இமைகள் வடிக்கும்
திரவ வார்த்தைகளின்
திண்ணத்தை
காற்றின் ஆறுதல் மொழியால்
மென்மையாக வருடிக் கொடுத்து
துணைநின்று தீர்த்திடாத
துயிரில்லை
துயிலும் போதும்
அரணாய் சூழ்ந்திருக்கும்
அந்த ஸ்பரிசம்
உங்கள் உருவம்
அருகில் இருக்கையில்
துன்பத் துயரங்கள்
என்னைத் தீண்டியதில்லை
கஷ்டக் கவலைகள்
என்னை அண்டியதில்லை
என் விருப்பு வெறுப்புகளுக்கு
எப்போதும் செவிச் சாய்க்கும்
உங்கள் மனதுக்கு
மகளாய் பிறந்ததற்கு
நான் மகிழ்ந்திடாத
நாளில்லை
இந்த ரகசியம்
இதுநாள் வரையில்
என் தலையணைக்கு மட்டுமே தெரியும்
நன்றி சொல்ல வேண்டும்
போலிருக்கிறது
ஆனால்
எதற்கு நன்றி
சொல்ல.?
எப்படி நன்றி
சொல்ல.?
எதற்குச் சொல்ல வேண்டும்
எப்படிச் சொல்ல வேண்டும்
என்றெல்லாம் தெரியவில்லை
நன்றி சொல்லுவது அவசியமா
என்றுக் கூட தெரியவில்லை
நன்றி என்ற சொல்லை விட
உயர்ந்தச் சொற்கள்
வேறேதும் இருந்தால்
அவற்றைக் என் கண்ணீர்த் துளிகளால் நனைத்து
வாடாத கவிதை மாலையொன்றைச்
சாற்றிடுவேன்
இப்போதைக்கு
உங்களது தோளில்
சாய்ந்துக் கொள்கிறேன்.
கண்கள்
கண்ணீர் மாலையைக் கோர்க்கின்றன
வழிந்திறங்கும் என் கண்ணீர்த் துளிகளை
தங்கள் சட்டைப் பையில்
சேமித்துக் கொள்வீர்களென்று
நன்றாகத் தெரியும்
துன்பத்தைக் கரைக்க மட்டுமல்ல
மகிழ்ச்சியை மன நிறைவை
காட்டவும்
கண்ணீர் தான் மொழி
இது பாராட்டு அல்ல
தந்தைக்கு இந்த மகள் பாடும் தாலாட்டு
கார்த்திக் பிரகாசம்...
தந்தைக்கு எழுதுகிறாள்
அதிர்ந்து பேசியதில்லை
அதிகம் திட்டியதில்லை
கஷ்டத்தைச் சொல்லி புலம்பியதில்லை
கவலையை எண்ணி வருந்தியதில்லை
தாத்தன்
பெரியாரை கற்றறிந்ததில்லை
ஆனால்
பெண் பிள்ளையென்று எனக்கு
கட்டுப்பாடுகள்
விதித்ததில்லை
வயதாயிற்று
வதுவை
முடிக்க வேண்டுமென்று
வற்புறுத்தியதில்லை
என் இமைகள் வடிக்கும்
திரவ வார்த்தைகளின்
திண்ணத்தை
காற்றின் ஆறுதல் மொழியால்
மென்மையாக வருடிக் கொடுத்து
துணைநின்று தீர்த்திடாத
துயிரில்லை
துயிலும் போதும்
அரணாய் சூழ்ந்திருக்கும்
அந்த ஸ்பரிசம்
உங்கள் உருவம்
அருகில் இருக்கையில்
துன்பத் துயரங்கள்
என்னைத் தீண்டியதில்லை
கஷ்டக் கவலைகள்
என்னை அண்டியதில்லை
என் விருப்பு வெறுப்புகளுக்கு
எப்போதும் செவிச் சாய்க்கும்
உங்கள் மனதுக்கு
மகளாய் பிறந்ததற்கு
நான் மகிழ்ந்திடாத
நாளில்லை
இந்த ரகசியம்
இதுநாள் வரையில்
என் தலையணைக்கு மட்டுமே தெரியும்
நன்றி சொல்ல வேண்டும்
போலிருக்கிறது
ஆனால்
எதற்கு நன்றி
சொல்ல.?
எப்படி நன்றி
சொல்ல.?
எதற்குச் சொல்ல வேண்டும்
எப்படிச் சொல்ல வேண்டும்
என்றெல்லாம் தெரியவில்லை
நன்றி சொல்லுவது அவசியமா
என்றுக் கூட தெரியவில்லை
நன்றி என்ற சொல்லை விட
உயர்ந்தச் சொற்கள்
வேறேதும் இருந்தால்
அவற்றைக் என் கண்ணீர்த் துளிகளால் நனைத்து
வாடாத கவிதை மாலையொன்றைச்
சாற்றிடுவேன்
இப்போதைக்கு
உங்களது தோளில்
சாய்ந்துக் கொள்கிறேன்.
கண்கள்
கண்ணீர் மாலையைக் கோர்க்கின்றன
வழிந்திறங்கும் என் கண்ணீர்த் துளிகளை
தங்கள் சட்டைப் பையில்
சேமித்துக் கொள்வீர்களென்று
நன்றாகத் தெரியும்
துன்பத்தைக் கரைக்க மட்டுமல்ல
மகிழ்ச்சியை மன நிறைவை
காட்டவும்
கண்ணீர் தான் மொழி
இது பாராட்டு அல்ல
தந்தைக்கு இந்த மகள் பாடும் தாலாட்டு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment