Skip to main content

தோட்டியின் மகன்

எழுபத்திரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் தகழி.சிவசங்கரப் பிள்ளை எழுதிய, தமிழில் சுந்தர ராமசாமி அவர்களால் மொழிப் பெயர்க்கப்பட்ட நாவல் 'தோட்டியின் மகன்'.

"தான் செய்யும் தோட்டி வேலை தன் மகனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு தந்தை. நான் ஒரு தோட்டியாக இருக்கலாம் ஆனால் என் மகன் கண்டிப்பாகத் ஒரு தோட்டியாகிவிட கூடாது என்ற வைராகியத்தோடு வாழும் இன்னொரு தந்தை. தோட்டி என்றொரு சமூகத்தை உருவாக்கி அவர்களின் அறியாமையையும், இயலாமையையும் தங்களின் மூல கருவிகளாக்கிக் கொண்டு அவர்களை சிதறவிடாமல், சிந்திக்கவிடாமல், யோசிக்கவிடாமல் முன்னேறவிடாமல் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் அடிமையாக வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தினர். மர்மக் காய்ச்சலோ, நோயோ வந்து நிறைய மனிதர்கள் இறந்துவிட்டால் கவலையே இல்லாமல் தோட்டி வேலைக்கு அதாவது தங்களின் மலத்தை அள்ளிச் சுத்தம் செய்ய வேண்டி வேறு ஊர்களில் இருந்து புதிதாக ஆட்களைக் கொண்டு வரும் மேல்தட்டு அதிகார வர்க்கம்" என்று ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மனக் கொந்தளிப்புகளை, ஏக்கங்களை, ஆதங்கங்களை மற்றும் அவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் நேரடி மற்றும் மறைமுக அடக்கு முறைகளை யதார்த்தமாகப் பதிய்வுச் செய்துள்ளார் 'தகழி'.

பள்ளிக் காலங்களிள் இறுதி பரீட்சை முடிந்ததும் பாட்டி வீட்டுக்கு சென்று விடுவேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே தான். 'வாடகைச் சைக்கிள் ஓட்டுவது, மாமாவுடன் கடைக்குச் செல்வது, வீட்டின் ஒருபகுதியிலேயே மளிகை கடை என்பதால் இருந்து தீணியாய் தின்று சலிப்பது, மாமாவுடன் அடிக்கடி இரவுக் காட்சி படத்துக்குச் செல்வது, நண்பர்களுடன் வெறுமனே வீதியில் சுற்றுவது' என்று பொழுது அதுபாட்டுக்குப் போகும். இப்படித்தான் விடுமுறைக் கால பாட்டி வீட்டு நினைவுகள் மனதில் இதுவரையில் பதிந்திருந்தன. இப்பொழுது "தோட்டியின் மகன்" புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு விடயம் நினைவுக் கல்லறையிலிருந்து உயிர்ப் பெற்று மீண்டு வந்தது.

தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் அவர் பின்பக்க வாசல் வழியாக வந்து நின்றுக் குரல் கொடுப்பார். ஆயாவோ, அத்தையோ மட்டும் தான் அவருடன் பேசுவார்கள். அந்தம்மாவின் பெயரென்று அவர்கள் எதையும் சொல்லி கூப்பிட்டதில்லை. கக்கூஸ்காரம்மா என்று தான் பொதுவாக அழைப்பார்கள். பின்பக்க வாசலில் அவர் வந்து நின்றதும், அத்தையோ ஆயாவோ யாரோ ஒருவர் சென்று ஏதோ சொல்வார்கள். அவர் தான் கொண்டு வந்திருந்த சட்டி, வாளி மற்றும் விளக்குமாறுடன் கக்கூஸ்குள் சென்று சுத்தம் செய்வார். "நல்லா தண்ணீ ஊத்திக் கழுவு" என்று இங்கிருந்து கட்டளைகள் பறக்கும்.

வேலை முடிந்ததும் அவருக்கென்று தனியாக ஒதுக்கி வைத்திருக்கும் அந்தப் பாத்திரத்தில் முந்தைய நாள் மிஞ்சியதை நிரப்பி அதை அவர் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தில் போட்டுக் கொட்டிவிட்டு மீண்டும் அந்தப் பாத்திரத்தைக் கழுவும் இடத்தில வைத்துவிடுவார்கள். பின்பு சில சில்லறைக் காசுகளைக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். சில்லறைக் காசுகளைப் பார்த்ததும் அந்தம்மா கும்பிடு போட்டுவிட்டு போவார்.

அன்று எதுவும் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது ஒரு குற்றவுணர்ச்சி உடலெங்கும் பரவுகின்றது.

கார்த்திக் பிரகாசம்..

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...