முன்னே செல்லும் வாகனத்தின்
பின்புறம் இப்படி எழுதியிருந்தது
பெண் தேடும் போது
கேவலமாகவும்
ஆம்புலன்சில் போகும் போது
கடவுளாகவும் தெரிபவன்
டிரைவர்
பின்னிருந்த வாகனத்தின் ஓட்டுநர்
படித்து சில நிமிடங்கள்
சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு
கண்களைக் கவிழ்த்து
விரிய விரும்பா இதழ்களை
மேலாகக் குவித்து
இடதுபுறமாக இழுத்து
இறுதியில் இதழ்களை இயல்பாக்கினார்
புன்னகையின் போர்வையில்
என்னவென்று சொல்லமுடியாத
ஏதோவொன்று இதழ்களின் ஓரத்தில்
வழிந்தது
அதன்
மறைவில்
இருவரும் முகம் தெரியாத
நண்பர்களாகியிருந்தனர்.
கார்த்திக் பிரகாசம்...
பின்புறம் இப்படி எழுதியிருந்தது
பெண் தேடும் போது
கேவலமாகவும்
ஆம்புலன்சில் போகும் போது
கடவுளாகவும் தெரிபவன்
டிரைவர்
பின்னிருந்த வாகனத்தின் ஓட்டுநர்
படித்து சில நிமிடங்கள்
சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு
கண்களைக் கவிழ்த்து
விரிய விரும்பா இதழ்களை
மேலாகக் குவித்து
இடதுபுறமாக இழுத்து
இறுதியில் இதழ்களை இயல்பாக்கினார்
புன்னகையின் போர்வையில்
என்னவென்று சொல்லமுடியாத
ஏதோவொன்று இதழ்களின் ஓரத்தில்
வழிந்தது
அதன்
மறைவில்
இருவரும் முகம் தெரியாத
நண்பர்களாகியிருந்தனர்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment