மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி தெருவில் என்னவோ பிதற்றிக் கொண்டுச் சென்றாள்.பிச்சைக்காரர்கள் தங்கள் கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தொழிலுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.ஒரு பையன் தெருமுக்கில் நேற்று கழுவிய அதே காரை இன்றும் கழுவிக் கொண்டிருந்தான்.பெருமூச்சுடன் புகையைக் கக்கி முதல் அடியை தயங்கியபடி எட்டு வைத்தது அரசாங்கப் பேருந்து. குளித்தும் பவுடர் பூசியும் மறைந்திடாத தூக்கத்துடன் சொக்கிக் கொண்டிருந்த முகங்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் வழக்கம் போல் தனக்குள் நிறைத்தபடி முறைத்தது கல்லூரிப் பேருந்து. செத்த எலியின் உடலை தன் அலகால் கொத்தி இழுத்துக் கொண்டிருந்தது ஒரு காகம். இடிப்பது போல வந்து மயிரிழையில் எனக்கே உயிரை விட்டுச் சென்றது ஆட்டோ.
கார்த்திக் பிரகாசம்...
இன்றும் இப்படித்தான் இயங்கத் தொடங்கியது நகரம் .
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment