பேரன்பே உருவாய்
பிறந்திட்ட பெண்ணினால்
காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
நான் காதலிக்கப்படுகிறேன்
என்ன ஒரு உணர்வு
இருக்கும் இரு விழிகளோடு
இன்னொன்று இணைந்தது போல
பறக்கவில்லை
காதல் பாடல்களுக்குக் குதிக்கவில்லை
மாறாக
இயல்புநிலையில்தான் இருக்கிறேன்
எதார்த்தமாகவே
இதயம் துடிக்கிறது
நிம்மதியைச் சுவாசிக்கத் தந்து
நிம்மதியாய் சுவாசிக்க வைக்கிறது
வேதனையை வெளியேற்றுகிறது
மகிழ்ச்சியாய் வியர்க்கிறது
காதலிக்கப்படும்
மனித ஆத்மா
இப்படித்தான் இருக்குமா.?
அவள் பெண்தான்
தேவதை அல்ல
ஒருவேளை தேவதையாகக் கூட
இருக்கலாம்
ஆனால்
என்னைக் காதலிப்பதனால்
அவள் தேவதையாகிவிடவில்லை
தேவதையாக இருப்பதனாலேயே
அவள் என்னைக் காதலிக்கிறாள்
நான் காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
கார்த்திக் பிரகாசம்...
பிறந்திட்ட பெண்ணினால்
காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
நான் காதலிக்கப்படுகிறேன்
என்ன ஒரு உணர்வு
இருக்கும் இரு விழிகளோடு
இன்னொன்று இணைந்தது போல
பறக்கவில்லை
காதல் பாடல்களுக்குக் குதிக்கவில்லை
மாறாக
இயல்புநிலையில்தான் இருக்கிறேன்
எதார்த்தமாகவே
இதயம் துடிக்கிறது
நிம்மதியைச் சுவாசிக்கத் தந்து
நிம்மதியாய் சுவாசிக்க வைக்கிறது
வேதனையை வெளியேற்றுகிறது
மகிழ்ச்சியாய் வியர்க்கிறது
காதலிக்கப்படும்
மனித ஆத்மா
இப்படித்தான் இருக்குமா.?
அவள் பெண்தான்
தேவதை அல்ல
ஒருவேளை தேவதையாகக் கூட
இருக்கலாம்
ஆனால்
என்னைக் காதலிப்பதனால்
அவள் தேவதையாகிவிடவில்லை
தேவதையாக இருப்பதனாலேயே
அவள் என்னைக் காதலிக்கிறாள்
நான் காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment