"எல்லாம் நன்றாகப் போகிறது" என்று நம்பிக் கொண்டிருந்தேன்.
அந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கையில் எதையுமே நான் உற்றுக் கவனிக்கவில்லை. ஆழ்ந்து யோசிக்கவில்லை. அதனால் நிழலுலகில் கண்மூடித்தனமாகவும் நிஜ வாழ்வில் பார்வையிருந்தும் குருடியாகவுமே வாழ்ந்திருக்கிறேன் - ஏமாந்திருக்கிறேன். கண்களைத் திறக்காமலேயே எதிரிலிருப்பது என்னவொரு ரம்மியமான இயற்கைக் காட்சியென்று பேரானந்தத்தில் குதூகலித்தவாறு திளைத்திருக்கிறேன். அதை அப்படியே ஆழ்மனதிற்கும் கடத்தி அது உருவாக்கி வைத்திருக்கும் மாய சிறைக்குள்ளே சுதந்திர கீதம் பாடிக் கொண்டு சுதந்திர காற்றைச் சுவாசிப்பதாய் நினைத்து எரியூட்டப்பட்ட பிணங்களின் வாடையைச் சுமந்து வரும் சுடுகாட்டுக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
ஆதவனின் வரிகளைப் போல், நம்ப வேண்டியதை விடுத்து நான் நம்ப விரும்புவதை மட்டுமே இத்தனை நாளாய் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது இப்போது தான் என் புத்திக்கு உரைக்கிறது.
இதோ எதிரே மேசையில் இருக்கும் அந்த வெள்ளைத் தாள் எனது ஒரேயொரு கையெழுத்தை எதிர்நோக்கிக் காற்றில் சடசடத்துக் கொண்டிருக்கிறது எப்போதோ நான் வாசித்தக் கவிதையை ஞாபகப்படுத்தியவாறு.
இடதுக் கையை தலைக்கு வைத்து வலதுக் காலை ஆட்டியவாறே உறங்குகிறான் வினோத். அப்படியே ஆனந்தனை அச்சு எடுத்தது போல. தோழி வீட்டிற்குச் சென்றிருக்கிறாள் கலையரசி.
பாவம் பிள்ளைகள். அப்பா என்ற உறவின் உன்னதத்தை - பாசத்தை - அர்த்தத்தை அறியாமலேயே குழந்தைப் பருவத்தைத் தொலைத்துவிட்டார்கள். அதன் மேன்மையை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் பாக்கியம் அவர்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை. தந்தையெனும் அற்புதமான உறவு அவர்களுக்கு அற்பமாகியதற்கு நானும் ஒரு வகையில் காரணம். ஆரம்பத்திலேயே நான் சுதாரித்திருக்க வேண்டும்.
வினோத் கூட பரவாயில்லை பாதி நாட்கள் ஹாஸ்டலில் இருந்தவன். அதனால் அவனுக்கு உணர்வு ரீதியிலான எப்போதும் ஏங்கித் தவிக்கும் ஒட்டுதல் இல்லை. ஆனால் கலையரசி அப்படி கிடையாது. அப்பாவின் பாசத்திற்காக ஏங்குபவள். ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை அந்த ஏக்கம் அவளைச் சுற்றி எந்நேரமும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அதன் சுழல் வளையத்திற்குள் தினம்தினம் சிக்கித் தவிக்கிறாள். ஒரு அம்மாவாக அதைத் தகர்க்க முயன்று முயன்று தினந்தினம் நான் தோல்வியை தான் சந்திக்கிறேன்.
இந்த வருடம் வினோத் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதப் போகிறான். தன் சாமத்திய சடங்குக்கான நாளை கலையரசி நெருங்கிக் கொண்டிருக்கிறாள். இருவரும் வாழ்வின் முக்கியமானக் கட்டத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க காலச் சக்கரத்தின் விசையில் சிக்கியபடி இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் விவாகரத்து நோட்டீசை அனுப்பியிருக்கிறான் ஆனந்தன்.
காதலித்துக் கரம் பிடித்தவன் ஆனந்தன். அன்பானவன். பெயருக்கு ஏற்றபடி எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பான். அந்தச் சிரிப்பு இருக்கிறதே அனைத்துக் காயங்களுக்குமான வசம்பு. தழும்புகள் மறையும் வரை அணைத்திடும் அற்புதம். காதல் விஷயம் எங்களின் பெற்றோர்களுக்குத் தெரிய வந்த போது அவன் வீட்டில் பெரிய அளவில் பிரச்சனை ஏதுமில்லை. ஓரிரு நாட்களில் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் என் குடும்பம் பெரியது. பெரியப்பா சித்தப்பா மாமா பங்காளி என்று ஒரு பெருங்கூட்டம். ஒவ்வொரு முறைக்காரரும் ஒவ்வொரு கெட்ட வார்த்தையில் என்னைத் திட்டினார்கள். அவற்றின் அர்த்தம் கூட எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. காதலிப்பதே பெற்றோர்க்குச் செய்யும் துரோகம் இதில் வேற்று சாதிக்கார பையனை - அதுவும் கீழ்ச் சாதிக்காரனைக் காதலிப்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றம் - நடத்தைக் கெட்டத் தனமென தெருவில் போகின்ற யார் எவரென்றே தெரியாதவர்களெல்லாம் வந்தென்னை அடித்தார்கள். அசிங்கமாகத் திட்டினார்கள். பெண்ணின் ஒவ்வொரு அந்தரங்க பாகத்தையும் - நடத்தையையும் குறிக்க அத்துனைக் கெட்ட வார்த்தைகள் இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆண்கள் மட்டுமல்ல உறவுக்கார பெண்களும் கூட அந்த வார்த்தைகளில் என்னைத் திட்டினார்கள். அவர்களில் பல பேரை அதற்கு முன்வரை நான் பார்த்ததே இல்லை. அவர்களுக்கு என் முழுப் பெயர் தெரிந்திருக்க கூட வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் ஒன்றுக்கூடி என் நடத்தைக்கும் ஒழுக்கத்திற்கும் புது மதிப்பு சான்றிதழ் பதிப்பித்தார்கள்.
முடிவெடுக்க வேண்டிய என் அப்பாவோ மலத்தில் ஊறிச் சுருண்டுக் கிடக்கும் புழுவைப் போல என்னைக் கேவலமாகப் பார்த்தார். தனக்கென்று தனி விருப்பமோ, சுயமாய் முடிவெடுக்கும் திறனோ இல்லாத என் அம்மா தலைவிரிக் கோலமாய் மாரில் அடித்து அழுதுக் கொண்டிருந்தாள்.குடல்கள் கிழிந்து, ரத்த நாளங்கள் சிதைந்து மற்ற உள் பாகங்களெல்லாம் வெளியே தெரிய, காக்கைகள் மேலும் அவற்றை கொத்திக் கிழிக்க, வாயைத் திறந்தவாறு தெருவில் கிடக்கும் செத்து எலியைப் போல நான் உணர்ச்சியற்று கிடந்தேன்.
எனக்கு நடத்தைப் பத்திரம் வாசித்தவர்களெல்லாம் நாளுக்கு நாள் சுவாரசியம் குறைய குறைய ஒவ்வொவொருவராய் நடையைக் கட்டினர். சூழ்ந்திருந்த விஷமங்கள் - சொந்தங்கள் - சில நாட்களில் களைந்ததும் அப்பா முதல்முறையாக அதைப் பற்றி என்னுடன் பேசினார். அவன் வேண்டாமென்று கெஞ்சினார். "நானும் அம்மாவும் தற்கொலை செய்துக் கொள்கிறோம் - பின்பு நீ சந்தோசமாக இரு" என்று மிரட்டினார்.
அவனின் குடும்பத்தைப் பற்றி, சாதியைப் பற்றி அசிங்க அசிங்கமாகத் திட்டினார்.
"உங்களுக்கோ - உங்கள் கௌரவத்திற்கோ - உங்களின் சமூக அந்தஸ்த்திற்கோ எந்நாளும்
என்னால் எந்தவித பிரச்சனையும் - பங்கமும் ஏற்படாது" என்றுச் சொல்லிவிட்டு ஓரமாக மூலையில் உட்கார்ந்து,
அழுதேன்... அழுதேன்... அழுதேன்...
என்னால் வேறென்ன செய்திட முடியும்..?
ஆனால் என் கண்ணீர்த் தான் அவர்களின் மனத்தைக் கரைத்திருக்க வேண்டும். ஆம். கல் நெஞ்சையும் உருக வைக்க பெண்ணின் கண்ணீரால் முடியும்.
நாட்கள் சென்றன.
ஒருநாள் மதியச் சாப்பாட்டிற்கு, கடையிலிருந்து வீட்டிற்கு வந்தார் அப்பா. ஒரு நாற்காலியை அவரருகில் போட்டு என்னையும் அமரச் சொன்னார்.
'கேட்டார்'
அவன் பேரென்ன.?
'ஆனந்தன்'
என்ன படிச்சிருக்கான்.?
'பிஇ மெக்கானிக்கல்'
எவளோ சம்பாதிக்கிறான்.?
'முப்பதாயிரம் மாசம்'
எத்தன நாளா தெரியும்.?
'ரெண்டர வருசமா'
நீ மொதல்ல சொன்னியா அவன் மொதல்ல சொன்னான்னா.?
'ரெண்டு பேத்துக்குமே அந்த எண்ணம் இருந்துச்சு. ஒண்ணாதான் பேசித் தீர்மானிச்சோம்'
அவங்க எஸ்.சியா.?
'ஆமா'
குடும்பம் எப்பிடி. அவங்க வீட்டுக்கு நீ போயிருக்கியா ?
'அப்பா கவர்மென்ட் ஜாப்ல இருந்து ரிட்டயரது ஆயிட்டாரு. அம்மா மளிகைக் கட வெச்சிருக்காங்க. அவங்க அப்பா அம்மா கல்யாண நாள் பன்ங்சனுக்கு நாங்க ஆபீஸ்ல வேல செய்றவங்களாம் ஒரு தடவ ஒண்ணா போனோம்'
சிறிது நேரம் மயான அமைதி நிலவியது. நான் குனிந்த தலை நிமிரவில்லை. அப்பாவிற்கு பக்கவாட்டில் அம்மா நின்றிருந்தாள்.
அமைதி..
அமைதி..
பெரும் மூச்சுக் காற்று என் உச்சந்தலையைத் தடவியது. ஆசிர்வதிப்பது போல் என் தலையைத் தடவி அப்பா சொன்னார். "சரி. அவங்க வீட்ல இருந்து பொண்ணுக் கேட்டு வரச் சொல்லு".
அப்படியே அவரின் காலில் விழுந்துவிட்டேன். அம்மா என்னைத் தூக்கி அணைத்துக் கொண்டாள்.
உதடுகள் சிரித்தன இருந்தாலும் கண்ணீரைக் கொட்டித் தள்ளின கண்கள்.
பின்பு அதனதன் போக்கில் எல்லாம் சுமூகமாக அரங்கேறியது.
வாழ்வது சுமையாக இல்லாமல் இனிமையாக இருந்த காலம்.
காதல் - காமம் - கோபம் என எல்லாவற்றின் உச்சநிலையையும் பேரானந்தமாய் ரசித்தேன்.
காதல் - கோபம் - முயக்கம் - வாழ்தல்.

வருடங்கள் ஓடின.
குடி குடியைக் கெடுப்பதில்லை. குடிக்காரர்கள் தான் தங்கள் குடியைக் கெடுத்துக் கொள்ள வேண்டிக் குடிக்கிறார்கள்
சிரித்த முகத்துடன் இருக்கும் ஆனந்தன் சில நாட்களாக சிடுசிடுவென இருக்கத் தொடங்கினான். கேட்டால் "தொழில் சரியில்லை நஷ்டமென்று" முகம் பார்க்காமல் கடந்துச் சென்றான். தொழில் சம்மந்தமானது என்று நானும் லேசாக இருந்தேன்.
ஒருநாள் இரவு பதினொரு மணியாகியும் வீட்டிற்கு வரவில்லை. போன் செய்த போது,"வேல இருக்கு. நைட்டு வீட்டுக்கு வரல" என்றுச் சொல்லிவிட்டு அடுத்த வார்த்தைச் சொல்வதற்குள் கட் செய்தான்.
அடுத்த நாள் காலை "கடைல கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். அதன் வரமுடில" என்று சொல்லிவிட்டு போய் படுத்துக் கொண்டான். "குடித்திருக்கிறான்" என்று பாத்ரூம் போன போது தெரிந்தது.
குடியைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் "பிசினஸ் பிரஷர் அதான்மா பிரெண்ட்ஸோட அப்புடியே ரிலாக்ஸா" என்பான்
மாதம் ஒருமுறை இருமுறையென இப்படி இருந்தவன் போகப் போக வாரத்திற்கு இருமுறை வீட்டிற்கு வராமல் இருந்தான். வீட்டிற்கு வரும்போதும் சரியாய் பேசவில்லை. போனிலும் ஒரு மெசேஜ் இல்லை. மேலும் அதைப் பற்றிப் பேசினால் வீட்டில் ஒரு பொம்பள பிள்ளை இருக்கிறது என்றும் பாராமல் "கூதி புண்ட ஓத்தா" என்று அசிங்கமாகத் திட்டினான்.
"இவன் என் ஆனந்தன் இல்லை. நான் காதலித்து கரம் பிடித்தது இவனை இல்லை. இவன் வேறு யாரோ. இவன் அவன் அல்ல"
ஏதோவொன்று சரியில்லை என்ற நினைப்பு மனதை அரிக்கத் தொடங்கியது. ஆனந்தனின் தொழில் சூழ்நிலையைப் பற்றி அவன் நண்பர்களிடம் விசாரிக்க முடிவுச் செய்தேன். விசாரித்த போது ஒரு பெரும் அதிர்ச்சி என்னை மூர்ச்சையாக்கியது. "ஆனந்தனுக்கு வேறொரு குடும்பம் இருக்கிறது. கலையரசி வயதில் ஒரு பையனும் இருக்கிறான்"
அப்போது தான் கண்களை இன்னும் நான் திறக்கவேயில்லை என்பதை உணர்ந்தேன். காதல் கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பது கூட தெரியாமல் இத்தனை வருடங்கள் அவனோடு குடும்பம் நடத்தியிருக்கிறேன். இந்த அறியாமையை என்னால் சகிக்கவே முடியவில்லை. எந்நாளும் என்னால் என்னை மன்னிக்கவே முடியாது. இந்த அறியாமை என் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரம் இடைவெளி இல்லாமல் அழுகையாய் வந்தது.
இதற்கு மேலும் இதைப் பற்றி ஆனந்தனிடம் பேசாமல் இருந்தால் என்னைப் போல் ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.
கேட்டேன்.
"ஆமா. எனக்கொரு குடும்பம் இருக்கு"
தயக்கமோ பதற்றமோ இவ்விரண்டில் எதுவேனும் ஒன்றுக்கூட துளியும் இல்லாமல் அதையவன் கடந்தான்.
"எனக்குத் துரோகம் செய்துவிட்டாய்" என்று அவன் சட்டையைக் கிழித்து கோபத்தில் கத்திக் கதறி இறுதியில் அக்குடும்பத்தை விட்டுவிடும் படி காலில் விழுந்து கெஞ்சினேன்.
ஆனந்தனுக்காக என் அப்பாவிடம் கெஞ்சி அழுததை விட, பல மடங்கு என் குழந்தைகளுக்காக ஆனந்தனிடம் அழுதுக் கெஞ்சினேன்.
"அதெல்லாம் என்னால் முடியாது. அவர்களை விட்டுவிட்டு ஒருநாளும் என்னால இருக்கமுடியாது. நீ வேணும்னா என்ன விட்டுப் போ. நான் நிம்மதியா இருப்பேன் " இரும்பை போல உறுதியாகவும், துளிக்கும் இறக்கம் இல்லாமலும் வந்து விழுந்தன வார்த்தைகள்.
உடனே என் கோபம் ஆனந்தனை வசியப்படுத்தியவளின் மேல் திரும்பியது.
"எங்க இருக்கா அந்த தேவடியா முண்ட. என் வாழ்கையை கெடுக்க வந்த மூதேவி மவ. அவுசாரி கூதி" என்று தொண்டைக் கிழிய கத்தினேன். "பளார் பளார்" என்று இரண்டு கன்னத்திலும் அறைந்தான்.அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து விட்டேன். அதோடு அவன் வீட்டிலிருந்து வெளியேறி விட்டான்.
நான்கு வருடங்கள் ஆயிற்று.
மாதம் மாதம் பணம் மட்டும் அனுப்பி விடுகிறான்.
"என்னாச்சு.. ஏதாச்சு.." என்று இதுவரை ஒரு கேள்வி இல்லை.
எதேச்சையாக வெளியே எங்கேயோ சந்தித்தால் கூட முகம் பார்க்காமல் சென்று விடுவான். நான் வீட்டில் இல்லாத போது பிள்ளைகளை மட்டும் பார்த்து செல்கிறான் என்று வெளியில் கோபமாக இருந்தாலும் உள்மனதில் ஒரு திருப்தி மிஞ்சும்.

காதல் காலத்தின் நினைவுகளைத் தாங்கியபடி அவன் கட்டிய தாலி கடைசியாய் ஒருமுறை இன்று என் மார்பில் கனக்கிறது
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment