வாழ்நாள் முழுவதும்
எந்த அங்கீகாரத்துக்காக
இரவு பகல் பாராமல் உழைத்தேனோ
எந்தவொன்றுக்காக உறங்கும் போதும்
உறங்கிடாமல் ஆசைப்பட்டேனோ
இன்றது இனிதே நடக்கிறது
கவிதையை நீட்டியபோது
இளக்காரமாய் இளித்தவர்கள்
இன்று சொற்களுக்கு
இடையேயுள்ள
இடைவெளியையும்
உற்றுக் கவனிக்கிறார்கள்
எழுத்திலிருக்கும் சிரத்தையின்மையின் சிரத்தையை
மனம்விட்டு சிலாகிக்கிறார்கள்
யதார்த்த சொல்லாடலில் விரிந்திருக்கும்
ரசனையை வியக்கிறார்கள்
நானெழுதிய
வரலாறும் பண்பாடும்
நுட்பமாகக் கையாளப்பட்ட
என் மனதிற்கு மிகவும் நெருக்கமான
அந்த நாவலை
ஆராய்ச்சிப் பாடத்தில் சேர்த்திருக்கிறார்கள்
அரசு விருதும் அறிவித்திருக்கிறார்கள்
பல வருடங்களுக்கு முன்பு
நான் துரத்தியடிக்கப்பட்ட
அதே வளாகத்தில்
இன்னும் சிலநாட்களில்
பாராட்டு விழா ஏற்பாடாகிறதென்று
அறிகிறேன்
ஒருவேளை
போன வாரம் மாரடைப்பு ஏற்பட்டு
நான் இறக்காமல் இருந்திருந்தால்
அப்பாராட்டு விழாவில்
பங்குக் கொண்டிருக்கவே
விரும்புவேன்
கார்த்திக் பிரகாசம்...
எந்த அங்கீகாரத்துக்காக
இரவு பகல் பாராமல் உழைத்தேனோ
எந்தவொன்றுக்காக உறங்கும் போதும்
உறங்கிடாமல் ஆசைப்பட்டேனோ
இன்றது இனிதே நடக்கிறது
புரியவில்லை புதிதாக ஒன்றுமில்லை என்றுக்
கண்டுக்கொள்ளாதவர்களலெல்லாம்
இதோ என் திறமையை மெச்சுகிறார்கள்
கண்டுக்கொள்ளாதவர்களலெல்லாம்
இதோ என் திறமையை மெச்சுகிறார்கள்
கவிதையை நீட்டியபோது
இளக்காரமாய் இளித்தவர்கள்
இன்று சொற்களுக்கு
இடையேயுள்ள
இடைவெளியையும்
உற்றுக் கவனிக்கிறார்கள்
எழுத்திலிருக்கும் சிரத்தையின்மையின் சிரத்தையை
மனம்விட்டு சிலாகிக்கிறார்கள்
யதார்த்த சொல்லாடலில் விரிந்திருக்கும்
ரசனையை வியக்கிறார்கள்
நானெழுதிய
வரலாறும் பண்பாடும்
நுட்பமாகக் கையாளப்பட்ட
என் மனதிற்கு மிகவும் நெருக்கமான
அந்த நாவலை
ஆராய்ச்சிப் பாடத்தில் சேர்த்திருக்கிறார்கள்
அரசு விருதும் அறிவித்திருக்கிறார்கள்
பல வருடங்களுக்கு முன்பு
நான் துரத்தியடிக்கப்பட்ட
அதே வளாகத்தில்
இன்னும் சிலநாட்களில்
பாராட்டு விழா ஏற்பாடாகிறதென்று
அறிகிறேன்
ஒருவேளை
போன வாரம் மாரடைப்பு ஏற்பட்டு
நான் இறக்காமல் இருந்திருந்தால்
அப்பாராட்டு விழாவில்
பங்குக் கொண்டிருக்கவே
விரும்புவேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment