ஒரு கவிதை என்ன செய்துவிடும்
நொடி நேரத்தில் காலங்காலமாய்
சுமந்து திரிந்த
வெத்து பிம்பங்களைச்
சுக்கு நூறாக்கி
சுயத்தை நிர்வாணமாக்கும்
கர்வத்தின் கூடாரத்தைச்
சம்மட்டி அடியாய் வீழ்த்தும்
ஆதிக்கத்தின் கொடுங்கோலைக்
கட்டெறும்பு கடியால்
அசைத்துப் பார்க்கும்
உலகத்தில் இல்லை
உயிர்களில் புது உலகம்
பிறக்கும் புதிர் விளங்கும்
குழந்தைமை
முதுமை
வாலிப பருவங்களைக்
கைகோர்த்து ஒன்றாய் நடை பழக்கும்
சமயங்களில்
தற்கொலை எண்ணத்திலிருந்தும்
காக்கும்
கேளாத மனதின் குரலுக்குச்
சோராமல் செவி சாய்த்து
ம் கொட்டும்
குறைந்தபட்சம்
வாழ்வதற்கு ஒரு காரணத்தைத்
தரும்
சுமந்து திரிந்த
வெத்து பிம்பங்களைச்
சுக்கு நூறாக்கி
சுயத்தை நிர்வாணமாக்கும்
கர்வத்தின் கூடாரத்தைச்
சம்மட்டி அடியாய் வீழ்த்தும்
ஆதிக்கத்தின் கொடுங்கோலைக்
கட்டெறும்பு கடியால்
அசைத்துப் பார்க்கும்
உலகத்தில் இல்லை
உயிர்களில் புது உலகம்
பிறக்கும் புதிர் விளங்கும்
குழந்தைமை
முதுமை
வாலிப பருவங்களைக்
கைகோர்த்து ஒன்றாய் நடை பழக்கும்
சமயங்களில்
தற்கொலை எண்ணத்திலிருந்தும்
காக்கும்
கேளாத மனதின் குரலுக்குச்
சோராமல் செவி சாய்த்து
ம் கொட்டும்
குறைந்தபட்சம்
வாழ்வதற்கு ஒரு காரணத்தைத்
தரும்
Comments
Post a Comment