நாளைக்குப் பயணம்
மறுபடியும் பார்க்க இயலுமோ
இயலாதோ
இதுவரையில்
சொல்ல நினைத்துத்
தவிர்த்ததையெல்லாம்
அடை மழையாய் கொட்டித் தீர்த்திருக்கிறாள்
கடிதத்தில்
இருபது வருடத் தவிப்பை
இரண்டு பக்கங்களில்
இளைப்பாற முயலும் கூச்சமற்ற
அழுகையின் விசும்பல்
ஒரே மூச்சில் படித்துவிட முடியுமென்னால்
ஆனால்
நிறுத்தி நிறுத்தி
அனுபவிக்கிறேன்
காதலின் பெருஞ்சுகத்தை
வழிந்தோடும் கண்ணீரினூடே
எத்தகைய உறவு
எவ்வளவு காதல்
எல்லாவற்றையும் பொய்யாயேனும் கடக்கக்
காலத்திற்கும்
ஓர் கடிதம் போதுமானதா
நிராதவரான காதல்
அநாதையாய் புரள்கிறது
காற்றில்
எதுவும் சொல்லிக் கொள்ளாமல்
நேற்றே கிளம்பிவிட்டாள்
அவள்
இயலாதோ
இதுவரையில்
சொல்ல நினைத்துத்
தவிர்த்ததையெல்லாம்
அடை மழையாய் கொட்டித் தீர்த்திருக்கிறாள்
கடிதத்தில்
இருபது வருடத் தவிப்பை
இரண்டு பக்கங்களில்
இளைப்பாற முயலும் கூச்சமற்ற
அழுகையின் விசும்பல்
ஒரே மூச்சில் படித்துவிட முடியுமென்னால்
ஆனால்
நிறுத்தி நிறுத்தி
அனுபவிக்கிறேன்
காதலின் பெருஞ்சுகத்தை
வழிந்தோடும் கண்ணீரினூடே
எத்தகைய உறவு
எவ்வளவு காதல்
எல்லாவற்றையும் பொய்யாயேனும் கடக்கக்
காலத்திற்கும்
ஓர் கடிதம் போதுமானதா
நிராதவரான காதல்
அநாதையாய் புரள்கிறது
காற்றில்
எதுவும் சொல்லிக் கொள்ளாமல்
நேற்றே கிளம்பிவிட்டாள்
அவள்
Comments
Post a Comment