சுருக்கு பை அளவுக்குச் சுருங்கிவிட்டது
தூரமெல்லாம்
உலகில்
எந்த மூலையிலிருந்தால் என்ன
தொழில்நுட்பத்தின் கரம் பற்றி
முகத்துக்கு முகம் நோக்கி
நினைத்த மாத்திரத்தில் கதைக்கலாம்
என்கிறாய்
எனக்கிருப்பது ஒரே சந்தேகம்
தொடுதிரையில் முத்தமிட்டால்
நின் நெற்றியில் ஈரம்
படிந்திடுமா?
தூரமெல்லாம்
உலகில்
எந்த மூலையிலிருந்தால் என்ன
தொழில்நுட்பத்தின் கரம் பற்றி
முகத்துக்கு முகம் நோக்கி
நினைத்த மாத்திரத்தில் கதைக்கலாம்
என்கிறாய்
எனக்கிருப்பது ஒரே சந்தேகம்
தொடுதிரையில் முத்தமிட்டால்
நின் நெற்றியில் ஈரம்
படிந்திடுமா?
Comments
Post a Comment