திருச்சிற்றம்பலத்தைப் போலத்
துரித நேரத்தில் உருவானதில்லை
ஷோபனாவின் அன்பு
நெடுங்கால பாசி போலக்
கண்டுணரப் படாமல்
கூடவே படர்ந்து கிடந்தது
மழலையின் கரங்களில்
அகப்பட்ட விலையுயர்ந்த பொருள்
போன்றது அது
இருப்பினும்
ஷோபனாவின் அன்பை உணர்ந்து கொள்ள
தன் அன்பை துட்சமென கருதும்
ஓர் உறவில் வீழ்ந்து நோக
வேண்டியிருக்கிறது
என்னவாயினும்
ஒரு கட்டத்தில்
தன்னைத் தேடித் திரும்பி வரும் அன்பை
ஷோபனா வீம்புக்கேனும்
வெறுத்து
ஒதுக்குவதில்லை
யாராலும்
புரிந்து கொள்ளக்கூடிய
ஆனால் எல்லோராலும்
விளங்கிக்க முடியாத அன்பு
ஷோபனாவின் பலவீனமல்ல
தூய அன்பின் பலவீனம்
Comments
Post a Comment