அழுது தீர்த்துவிட்டேன்
சொற்கள் தேயுமளவு புலம்பிவிட்டேன்
மனமின்னும் மீளவில்லை
மரணப் படுக்கையில்
உயிரைச் சீராக வெளியேற்றும்
சுகமற்ற ஜீவனாய்
பேயறைந்து நின்றிருந்தேன்
ஆறுதல் சொல்லவோ
அரவணைக்கவோ ஆட்கள் இருந்தனர்
ஆனால் முகங்களில்லை
அவர்களுக்கு
கண்முன்னே
உயிர் கசிய
இறந்து கொண்டிருந்தது
நானல்ல
மனிதமும் அவர்களும் தான்
Comments
Post a Comment