புதிதாய் ஒன்றுமில்லை
வறண்டு காய்ந்த மனசில்
அடர்ந்த செழிப்பின் பால்
தினந்தினம் பூக்கும் அன்பு மலர்கள்
மனம் நிறைந்து வழிந்திட
ஒரு காதல் அரும்பியிருக்கிறது
சுருங்கச் சொன்னால்
இலையைப் போல் சுய கனமற்று
பெரு மரத்தின் பாரம் சுமக்கிறேன்
இருத்தலில்
நம்பிக்கை பிறந்திருக்கிறது
புதிதாய் வேறொன்றுமில்லை
Comments
Post a Comment