பறவையானது பஞ்சத்தின் நிமித்தம்
பொத்தி பொத்தி பாதுகாத்த தானியங்களை
இருப்பு விகிதம் குறைவது புலனாகாதவாறு
சாமர்த்தியமாகக் களவாடும்
சிறு எறும்பு கூட்டம் போல்
சேமித்த நினைவுகள்
துலக்கமிழந்து
மெல்ல மெல்லக் காலாவதியாகின்றன
வயிற்றுக் கோளாறால் அவதிப்படும்
வயோதிகன் பயன்படுத்திய
பழைய கழிவறையைப் போன்றதாகிவிட்ட
நினைவுகளில்
நிகழ்பவையும்
சீராகப் பதியாமல்
குமைகின்றன
மூப்போ
வளர்ந்தெழும் பற்றற்ற போக்கோ
என்னைத் தொலைத்துவிட்டு
வேறெதையோ
தேடச் சொல்கிறது
Comments
Post a Comment