கனவு கண்ட
காதலனின் உருவத்திற்குள்
கச்சிதமாகப் பொருத்தப் பார்க்கிறாள்
நானோ
நிரந்தர உருவமற்றவன்
அருவத்தின் போதி நிழலில்
தவம் கிடப்பவன்
அன்பைத் திரித்து
கருணையின் சிலுவையில் சாத்துகிறாள்
தூக்கிச் சுமக்கவும் வலுவில்லை
தூர எறியவும் மனமில்லை
என் குருதி
Comments
Post a Comment