சிறுத்தையும் மானும்
முத்தமிட்டு ஆரத் தழுவிடும் புகைப்படமொன்று
அபூர்வ காட்சியெனப் பகிரப்பட்டிருந்தது
சட்டெனக்
குடிநீர்த் தொட்டியில்
நரகலைக் கலந்த
வன்மம் நினைவில் வருகிறது
மிருகமாய் இருத்தலில்
விடுபடும் மிருகம்
மனிதனாய் இருக்க முடிந்திடாத
மனிதனுக்குச் சொல்லும்
பேருண்மை
அறம்
Comments
Post a Comment