எழுதியவர்: அரிசங்கர்
வகைமை: நாவல் பதிப்பகம்: எதிர் வெளியீடு
பாண்டிச்சேரியின் நிலவியல் அமைப்பை அடித்தளமாகக் கொண்டு வாழ்வென்னும் இருத்தலின் போராட்டத்தை அதன் சாராம்சத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் அரிசங்கர்.
தோற்றுக் கொண்டே இருக்கும் மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான் அல்லது வாழ்க்கை துரத்திக் கொண்டே இருக்கிறது. தோற்பதற்கோ/வாழ்க்கையின் துரத்தலுக்கோ பயந்து அவன் வாழ்வின் கடைசி நாள் வரைக்கும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவே கட்டாயப்படுத்தப்படுகிறான். இந்த ஓட்டத்தில், என் மொழிக்காரன், என் ஊர்க்காரன், என் சாதிக்காரன், என் நாட்டுக்காரன் என எல்லா வகையான அலங்கார மேற்பூச்சு சங்கதிகளுக்குமே மறைமுக எல்லைக் கோடு உண்டு.
இப்படியாகப்பட்ட இருப்புச்சார்ந்த போராட்டத்தில் பல கதாபாத்திரங்களை உலவவிட்டு, அவர்தம் மன விசாரணைகளின் மூலமாகவும், அனுபவ செறிவுகளின் மூலமாகவும் ஒரு விஷயத்தை நமக்குள் ஆழமாக விதைக்கிறது நாவல்.
"எப்பாடு பட்டாவது வாழ்வின் கடைசி நாள் வரையிலும் வாழ்ந்துவிடுவதே வெற்றி" என்பதே அது".
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment