Skip to main content

கொரில்லா

எழுதியவர்: ஷோபாசக்தி வகைமை: நாவல் வெளியீடு: கருப்புப் பிரதிகள்

இலங்கை - இந்திய ராணுவத்தினராலும், தமிழ்ப் போராளிக் குழுக்களாலும் ஏற்பட்ட கொடுமைகளினால் மனம் சிதைந்துபோன யாக்கப்பு அந்தோனிதாசன், தொடர்ந்து தாய்நாட்டில் அச்சமின்றி உயிரோடு வாழ்வதற்கான உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில், பயண முகவர்களின் உதவியோடு வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மார்க்கம் வழியாகப் பிரான்ஸை அடைந்து, ஏற்கனவே மூன்று முறை நிராகரிக்கப்பட்ட அரசியல் தஞ்சம் கோரும் அந்நாட்டில் தங்குவதற்கான அகதி விண்ணப்பத்தோடு தொடங்குகிறது நாவல்.

தமிழீழத்திற்குத் தன்னால் இயன்ற ஏதாவது செய்திட வேண்டும் என்ற தீவிர முனைப்பின் உந்துதலால், புலிகள் இயக்கத்தில் இணைந்து, உடலையும் மனதையும் கடுமையான சிரமத்திற்கு உட்படுத்திப் பயிற்சி பெற்றுக் களத்தில் இறங்குகிறான் ரொக்கி ராஜ்.

நாவலின் புனை கதாபாத்திரங்களோடு வாழ்வின் நிஜப் பாத்திரங்களும், போர் நடவடிக்கைகளும் அதன் பேரிலான படுகொலைகளும் கதையின் போக்கிலேயே பெரும் வலியோடும் வேதனையோடும் பதிவாகியுள்ளன.

எதிர்பாராதவிதமாக, இயக்கத்துக்கு நெருக்கமான ஒருவரை ரொக்கி ராஜ் தாக்கிவிடுகிறான். தன்மீது எந்தத் தவறும் இல்லை என்ற தன்னிலை விளக்கத்தோடு மேலிடத்திற்குக் கடிதமும் எழுதுகிறான். ஆனால் பலனில்லை; இயக்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் கண்காணிப்பிலிருந்த பகுதியில் ஒரு விசயம் காணாமல் போகிறது. இயக்கத்தினர் கூட்டிச் சென்று விசாரிக்கிறார்கள். "தலைவர் மீது சத்தியமாக, எனக்குத் தெரியாது" என்ற உண்மையைச் சொல்கிறான். நம்ப மறுக்கின்றனர். "கடைசியாக இயக்கம் எனக்கும் கள்ளத்தனம் கட்டிப்போட்டுது" என்ற மனக்கசப்பில் கொழும்பிற்குச் சென்றுவிடுகிறான்.

நாவலின் கடைசிப் பகுதி, அகதிகள் அரசியல் தஞ்சத்திற்காகக் காத்திருப்பதையும், அவர்களுக்கு இடையேயான கருத்தியல் முரண்பாடுகளையும் முன்வைக்கிறது. மேலும், யாக்கப்பு அந்தோனிதாசன் யார், ரொக்கி ராஜ் யார் என்பதற்கான விடையோடு முடிகிறது.

விசுவாசமாக இருந்த ரொக்கி ராஜின் மீது இயக்கம் ஒருவேளை அவனை நம்பிச் சுமுகச் சூழலை ஏற்படுத்தியிருந்தாலும், அவன் இறுதிவரை இருந்திருக்கமாட்டான். இதற்கு ஓர் உதாரணம் நாவலில் இருந்து...

//
"எல்லாமா எத்தின நேவி முடிஞ்சிருப்பாங்கள்?" எண்டு ரொக்கி ராஜ் கேட்கவும் ஓஷீலா ஒரு செக்கன் கண்ணை மூடித் திறந்து போட்டு "கிட்டத்தட்ட கணக்குச் சரியா வந்திருக்கும் " எண்டான்.

"அண்ணே நாங்கள் கதைக்கிறது பிழையோ ? இது கணக்குப் பார்க்கிற காரியமில்லை" எண்டு சடாரென்று ரொக்கி ராஜின்ர வாயில வந்திற்றுது.
//
அவர்கள் நம்மில் நூறு பேரைக் கொன்றார்கள்; அவர்களில் நான் இருநூறு பேரைக் கொல்லுவேன் என ரொக்கி ராஜால் ஒருபோதும் பயணித்திருக்க முடியாது என்பதையே மேற்கண்ட உரையாடல் சுட்டுகிறது.

பின்னே, மரணத்தின் கணக்கைப் பதிலுக்கொரு மரணத்தால் கழித்திட முடியுமா?

யார் யாரைக் கொன்றாலும், எதன் பொருட்டு அழித்தாலும் இறுதியில் ஒரு தாய் அழுவாள் என்பதே சுட்டெரிக்கும் உண்மை

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...