என் கதையில், ஒரு நாள் மேகத்தில் இருந்து தன் பயணத்தைக் கிளப்புகையில் எப்படியும் மண்ணை அடைய சில பல மணி நேரங்கள் ஆகுமென்று வெவ்வேறு திசையில் பயணிக்கத் தயாராக இருந்த இரு மழைத் துளிகள் ஒன்றோடு அறிமுகபடுத்திக் கொண்டு நண்பர்கள் ஆயின.. இரு மழைத் துளிகளும் தாங்கள் செல்லவிருக்கும் இடங்களைப் பற்றி பேச ஆரம்பித்தன. முதல் மழைத் துளி இரண்டாவது மழைத் துளியிடம் கேட்டது ., உனக்கு எங்கு செல்ல விருப்பம் நகரத்திற்கா இல்லை கிராமத்திற்கா.? என்று.. இரண்டாவது மழைத் துளி, தனக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆதலால் எங்கு சென்றாலும் பரவாயில்லை என்றது..! "சரி".. என்று முதல் மழைத் துளி தலைச் சாய்த்தது. இரண்டாவது மழைத் துளி அதே கேள்வியை முதல் மழைத் துளியிடம் கேட்டது.. முதல் மழைத் துளி மிகுந்த புன்னகையுடன் நான் கிராமத்திற்குச் செல்ல விருப்பபடுகிறேன் என்றது.. அதற்கு இரண்டாவது மழைத் துளி, கிராமத்திற்கா.? என்று ஏளன சிரிப்புடன் கேட்டது. முதல் மழைத் துளியும் "ஆம்" என்று தயக்கமில்லாமல் தலையசைத்தது. இரண்டாவது மழைத் துளி தன்னிடம் இரண்டு கேள்வி இருப்பதாகச் சொல்லி, முதல் கேள்வியாக நீங்கள் ஏன...