நான் வளர்ந்த கருவில்
எனக்கு முன் வளர்ந்தவள்..
அவள் அணிந்த சேலையில்
எனக்கு தொட்டில் கட்டியதில்லை..
ஆனால் அவள் துப்பட்டாவில்
எனக்கு தலை துவட்டி இருக்கிறாள்..
நான் தூங்கும் போது எனக்கு
தாலாட்டு பாடியதில்லை
ஆனால் இரவு முழுவதும் என்னை
தன் தோளிலேயே சாய்த்துக் கொண்டு
உறங்கியும் உறங்காமல் இருந்திருக்கிறாள்..
பசிக்கும் போது எனக்கு பால் கொடுத்ததில்லை
ஆனால் தனக்கு பசித்தாலும் கூட தன்
பங்கையும் சேர்த்து எனக்கு கொடுத்திருக்கிறாள்..
நான் என் அம்மாவின் இளைய மகன்
ஆனால் என் அக்காவின் மூத்த மகன்..
கார்த்திக் பிரகாசம்...
எனக்கு முன் வளர்ந்தவள்..
அவள் அணிந்த சேலையில்
எனக்கு தொட்டில் கட்டியதில்லை..
ஆனால் அவள் துப்பட்டாவில்
எனக்கு தலை துவட்டி இருக்கிறாள்..
நான் தூங்கும் போது எனக்கு
தாலாட்டு பாடியதில்லை
ஆனால் இரவு முழுவதும் என்னை
தன் தோளிலேயே சாய்த்துக் கொண்டு
உறங்கியும் உறங்காமல் இருந்திருக்கிறாள்..
பசிக்கும் போது எனக்கு பால் கொடுத்ததில்லை
ஆனால் தனக்கு பசித்தாலும் கூட தன்
பங்கையும் சேர்த்து எனக்கு கொடுத்திருக்கிறாள்..
நான் என் அம்மாவின் இளைய மகன்
ஆனால் என் அக்காவின் மூத்த மகன்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment