வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் படித்த ஒரு கதை ஒவ்வொரு தாயிடமும் உறைந்துக் கிடக்கும் அறியபடாத மேன்மையை மனத்திற்குள் பாய்ச்சிச் சென்றது.. அந்த கதையை படித்து முடிக்கும் தருணத்தில் என்னை கேட்காமலேயே கண்ணீர்த் துளிகள் என் கண்களை ஆக்கிரமித்திருந்தன.
நான் படித்து, உணர்ந்த; நெகிழ்ந்த கதையை நீங்களும் படித்துணர்ந்து நெகிழ்வதற்காக...
நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தன் தந்தை இறந்ததும் தன் தாயை முதியோர் இல்லத்தில் அனுமதித்து விட்டு தன் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுகிறான் மகன். ஒரு நாள் முதியோர் இல்லத்திலிருந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் அவனுடைய தாய் உடல் நலக்குறைவின்றி கிடக்கிறார் மேலும் அவர் தன் வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கிறார் என்று அறைக்கூவல் விட்டுவிட்டு அணைந்துவிடுகிறது அந்த அழைப்பு.
பதறிப்போன மகன் தன் தாயைப் பார்க்க முதியோர் இல்லத்திற்கு விரைகிறான். படுக்கையில் கிடக்கும் தாயைப் பார்த்து "உனக்கு என்னால் இப்பொழுது என்ன செய்ய முடியும்" என்று வினவுகிறான் மகன்.
உடனே அந்த தாய் எனக்கு ஒன்னும் வேணாம் கண்ணா. இந்த முதியோர் இல்லத்திற்கு ஒரு சில ஃபேன்களை வாங்கிக் கொடு. இரவில் சரியான காற்று வசதி இல்லாததால் இங்கிருப்பவர்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.. அப்புடியே நான் இங்கு வந்த நாள் முதல் நிறைய உணவுப் பொருட்கள் வீணாக காண்கிறேன். ஆதலால் ஃபிரிட்ஜ் ஒன்று வாங்கிக் கொடுத்து விடு என்கிறார்..
அந்த மகனுக்கு பயங்கர ஆச்சரியம். தன் வாழ்நாளில் இதுவரையில் தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று ஒருபோதும் கேட்காத தன் தாய் இப்பொழுது இதை கேட்கிறாளே என்று.. உடனே அந்த ஆச்சரியத்தை அவளிடமே கேள்வியாகவும் விழைகிறான்..
அதற்கு அந்த தாய் சொன்ன பதில், அவனுக்கு தன் உள்ளத்தில் கீறிய பாறைக் கற்களை கொண்டு எறிவது போல் இருந்தது. அந்த பதில் என்னவென்றால், மகனே நான் பிறந்தது முதலே நிறைய நாட்கள் உண்ணாமலையே இரவில் உறங்கி இருக்கிறேன். ஃபேன் காற்று இல்லாமல் இருந்தாலும் தூக்கம் என்னை ஒருபோதும் துறந்ததில்லை..
ஆனால் நீயோ பசி தாங்க மாட்டாய். ஃபேன் இல்லையென்றால் ஒரு நிமிடம் கூட கண் உறங்க மாட்டாய். ஒரு வேளை உன்னுடைய வயதான காலத்தில் நீயும் இங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை உன் மகன்/மகனால் ஏற்படலாம். அப்பொழுது நீ உன் கடைசிக் காலத்தில் கஷ்டப்பட கூடாது என்பதற்காகத் தான் இவற்றையெல்லாம் இந்த முதியோர் இல்லத்திற்கு வாங்கித் தர சொல்கிறேன் ஏனென்றால் "உன் தாயாக எனக்குத் தான் தெரியும் உனக்கு என்ன தேவை என்று" என்று சொல்லி முடிக்கிறாள்.
தாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மகனின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் உடைபட்டு அவன் கன்னங்களைத் தாண்டி பயணப்பட்டு கொண்டிருந்தது..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment