என் வீட்டு அஞ்சறைப் பெட்டி முதல்
அழுக்குத் துணி வரை அனைத்துக்கும்
இன்று அளவில்லா ஆனந்தம்..
அவளின் வளையல் ஓசையில்
இத்துணை நாள் பேச முடியாத
கதைகளை இனிதே பேசிட..
கலையிழந்துக் கிடந்த கண்ணாடி
இன்று விடிவதற்குள்ளேயே பவுடர் அடித்து
பளபளவென்று நேரம் பறக்க
காத்துக் கொண்டிருக்கிறது
அவளின் பூ முகத்திற்காக...
ஆம். திருமணம் முடிந்த கையோடு
புகுந்த வீட்டிற்குச் சென்று விட்ட
என் தங்கை இன்று வீட்டிற்கு
வந்திருக்கிறாள்..
கார்த்திக் பிரகாசம்...
அழுக்குத் துணி வரை அனைத்துக்கும்
இன்று அளவில்லா ஆனந்தம்..
அவளின் வளையல் ஓசையில்
இத்துணை நாள் பேச முடியாத
கதைகளை இனிதே பேசிட..
கலையிழந்துக் கிடந்த கண்ணாடி
இன்று விடிவதற்குள்ளேயே பவுடர் அடித்து
பளபளவென்று நேரம் பறக்க
காத்துக் கொண்டிருக்கிறது
அவளின் பூ முகத்திற்காக...
ஆம். திருமணம் முடிந்த கையோடு
புகுந்த வீட்டிற்குச் சென்று விட்ட
என் தங்கை இன்று வீட்டிற்கு
வந்திருக்கிறாள்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment