கருவிலேயே கலைத்திருந்தால்
தாயின் கருவறையே
கல்லறையாவது புண்ணியமென்று
கண் இமைக்கும் முன்னே
கண்ணியமாக கண் மூடியிருப்பேன்..
குழந்தை இல்லாதவளுக்குத் தத்துக்
கொடுத்திருந்தால் "என் தாய்" என்ற
பெருமையுடன் வளர்ந்திருப்பேன்..
அவள் என்னைக் கலைக்கவும் இல்லை
தத்துக் கொடுக்கவும் இல்லை
தாரை வார்த்துவிட்டால் வாடகைக்கு..
நேற்று அடையாரு சிக்னலில்
இன்று திருவான்மியூர் சிக்னலில்
நாளைத் தெரியவில்லை..
ஆனால் கண்டிப்பாக ஏதாவதொரு
சிக்னலில்தான் நின்றுக் கொண்டிருப்பேன்
"பிச்சை எடுத்துக் கொடுப்பதற்காக"..
சென்னையில் சிக்னல்களுக்கா பஞ்சம்
சில்லறைகளுக்குத் தான் பஞ்சம்..
கார்த்திக் பிரகாசம்...
தாயின் கருவறையே
கல்லறையாவது புண்ணியமென்று
கண் இமைக்கும் முன்னே
கண்ணியமாக கண் மூடியிருப்பேன்..
குழந்தை இல்லாதவளுக்குத் தத்துக்
கொடுத்திருந்தால் "என் தாய்" என்ற
பெருமையுடன் வளர்ந்திருப்பேன்..
அவள் என்னைக் கலைக்கவும் இல்லை
தத்துக் கொடுக்கவும் இல்லை
தாரை வார்த்துவிட்டால் வாடகைக்கு..
நேற்று அடையாரு சிக்னலில்
இன்று திருவான்மியூர் சிக்னலில்
நாளைத் தெரியவில்லை..
ஆனால் கண்டிப்பாக ஏதாவதொரு
சிக்னலில்தான் நின்றுக் கொண்டிருப்பேன்
"பிச்சை எடுத்துக் கொடுப்பதற்காக"..
சென்னையில் சிக்னல்களுக்கா பஞ்சம்
சில்லறைகளுக்குத் தான் பஞ்சம்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment